வணக்கம்,

தமிழின ஈகி முத்துகுமார் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தர முன் வந்த 2 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை அவரது குடும்பத்தினர் ஏற்க முடியாதென அறிவித்துவிட்டனர். இந்நிலையில் முத்துகுமார் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் வசூலித்துத் தர எமது அமைப்பு முன் வந்துள்ளது.

முத்துகுமார் மரணத்திற்கு டெல்லி அரசும், தமிழக அரசுமே முழுப் பொறுப்பு. பணத்தை வீசியெறிந்து இந்தக் குற்றத்திலிருந்து இவ்வரசுகள் தப்ப முயல்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களப் படை வெறியர்களால் ஒவ்வொரு முறை படுகொலை செய்யப்படும்போதும், இவ்வாறே பணம் வீசப்படுகிறது. சிங்களர்களைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இவ்வரசுகள் முன் வருவதில்லை. இந்த அனுபவங்களிலிருந்து நாம் படிப்பினைப் பெற்றுள்ளோம்.

ஆகவே இவ்வரசுகளின் பாசாங்குப் பாசத்தை நிராகரித்த முத்துகுமார் குடும்பத்தினரு்க்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளை முத்துகுமாரை இழந்து வாடும் அவர்களுக்கு தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பாக 20 இலட்சம் ரூபாயை உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் திரட்டித் தர முடிவெடுத்துள்ளோம்.

தரணியெங்கும் உள்ள தமிழர்களின் மத்தியில் இச்செய்தியை பரப்பும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நிதியை வசூலிக்கப்போகும் குழுவினர் பற்றிய விவரங்கள், நிதி தருவதற்கான வழிவகைகள் உள்ளிட்டவை நாளை அறிவிக்கப்படும்.

அனைத்து மாணவர், இளைஞர், தகவல் தொழில்நுட்ப ஊழியர் கூட்டமைப்பு சார்பில்
- க.அருணபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

mob: +91 98 419 49 462