nimirvom jan2017

பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான். அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால் சுவாமிகள், அடிகள், நாயன்மார், ஆழ்வார் ஆகிவிடுவார்கள். அவர்கள் அதிகமாகப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்து பக்கத்தில் உள்ள கடவுள்களைப் பற்றிப் பாடிய பாட்டுக்கள் பிரபந்தங்கள் ஆகிவிடுகின்றன.

அக்கோவில்கள்பாடல் பெற்ற கோவில் ‘ஸ்தலங்கள்’ ஆகிவிடுகின்றன. பாட்டு ‘தேவ ஆரங்கள்’ ஆகிவிடுகின்றன. யாரோ ஒரு சில புலவர்கள் வள்ளுவர், அவ்வை, கபிலர் போன்றவர்கள் நீதிநூல், நீதி மஞ்சுரி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சதகம், நாலடி முதலிய பல நீதிகளைப் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்கள்.

60, 70 ஆண்டுகளுக்கு முன் நான் திண்ணைப் பள்ளிகளில் படிக்கும்பொழுது இவையே தலைசிறந்து விளங்கின. இப்போது அவை குப்பைமேட்டிற்கு போகச் செய்யப்பட்டு விட்டன. அந்த இடங்களைப் புராணங்கள், இதிகாசங்கள், கைப்பற்றிவிட்டன. மக்களுக்குள் 50 ஆண்டுக்கு முன்பிருந்த ஒழுக்கம் இன்று ஏன் இல்லை என்றால், ஒழுக்கத்தைப் போதிக்கும் இலக்கிய நூல் எங்கே இருக்கிறது? ஒழுக்கத்திற்காக இலக்கியம் இல்லை என்பது மாத்திரமல்லாமல் ஒழுக்கத்திற்கானகல்வியும் இல்லை. ஒழுக்கத்திற்கான மதமும் இல்லை. ஒழுக்கத்திற்கான அரசும் இல்லை. ஒழுக்கக் கேட்டிற்கும் மோசடி வஞ்சத்திற்கும், துரோகத்திற்கும் கல்லூரி சகலகலாசாலை என்று சொல்லத்தக்க வண்ணமே இவை இருக்கின்றன.

‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான்’... நூலிலிருந்து

உங்கள் கரங்களில்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு ஓர் மாத இதழின் தேவையை தோழர்களும் ஆதரவாளர் களும் நீண்டகாலமாக வற்புறுத்தி வந்தார்கள், அவர்களின் விருப்பம். இப்போது செயல் வடிவ மாகியுள்ளது.

‘நிமிர்வோம்’வந்துவிட்டது. இது ஒரு இயக்கத்தின் ஏடு என்றாலும் ‘நிமிர்வோம்’ பெரியாரியம் குறித்த விரிவான விவாதத்துக்கும் -உரையாடல்களுக்கும் தனது பக்கங்களைத் திறந்த வைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறோம்.

இந்துத்துவா சக்திகளின் நவீன அவதாரங்கள், உலகமயமாக்கலை உருவாக்கி வரும புதிய பண்பாட்டு நெருக்கடிகள், ஜாதி படிநிலைக் கட்டமைப்பில் உருவாகி வரும் மாற்றங்கள், மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் மூலாம் பூசும் முயற்சிகள், பெண்ணியம் குறித்த நவீன சிந்தனைகள் உள்ளிட்ட கருத்துகளைப்பரிமாறும் களமாக ‘நிமிர்வோம்’ நிற்கும்.

தமிழ்நாட்டில் சமூக-பொருளாதார மாற்றங் களை கோரி நிற்கும் -சமூக சக்திகளின் -தோழர்களின்ஆதரவுத்தளத்தைவிரிவாக்க, ‘நிமிர் வோம்’ தொடர்ந்து செயலாற்றும். 

Pin It

ரஷ்யப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டாகிறது. புரட்சிக் காலகட்டத்தில் பெரியாரும், அதுகுறித்த விரிவாக நடத்திய விவாதங்களை முன்வைக்கிறது இக்கட்டுரை, பெரியார் விட்டுச சென்ற நுட்பமான சமூகப் புரிதலை சமகாலத்தில் முன்னெடுப்பதில் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தையும் கட்டுரை பதிவு செய்கிறது.

போல்ஷெவிக் புரட்சியின் 100ஆவது ஆண்ட விழாவை அடுத்தாண்டு நாம் அனுசரிக்க இருக்கும் வேளையில் அப்புரட்சி மரபு ஈன்ற முக்கியமான அரசியல் ஆளுமைகளில் ஒருவரான ஃபிடல் காஸ்டிரோவை நினைவு கோராமல் இருக்க முடியாது. காரணம், போல்ஷெவிக் புரட்சியாளர்களான லெனின், ட்ராட்ஸ்கி ஆகியோரை போல அவருமே சோசலிசத்தை கட்டியெழுப்பும் பணியை புதிய மானுடத்தை உருவாக்க முனையும் பணியுடன் அடையாளப்படுத்தினார். அவரின் சக புரட்சியாளரான செ குவேரா, உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது எத்தனை அவசியமோ, புதிய மனிதனை உருவாக்கும் செயல்பாடும் அத்தனை அவசியமானது என்று வாதிட்டார். இத்தகைய உருவாக்கத்தை கட்டளைகள் மூலமோ புரட்சி நடந்து முடிந்த மாத்திரத்திலோ சாதிக்க முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கல்வி, கேள்வி, விவாதம், புரட்சியாளர்கள் சிறந்த முன்னுதாரணங்களாக இருந்து மக்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பது, கலையிலும் இலக்கியத்திலும் புதிய பரிசோதனைகளுக்கு இடமளிப்பது என்பன போன்ற பலவகைப்பட்ட செயல்பாடுகளை உள்ளடக்கிய அணுகுமுறையே புதிய மானுடத்தை வார்த்தெடுக்க உதவும் என்றும் விளக்கினார்.

periyar 450அரசியல் ரீதியாகவும் பொருளாதார தளத்திலும் சோசலிசத்தை கட்டியமைக்கும் பணியை நிறைவு செய்ய, அதற்கு ஈடுகொடுக்க மேற்கண்ட பணிகள் அமைய வேண்டியதையும், இவற்றை செய்து முடிக்க அறவயப்பட்ட மனநிலையும் உறுதிப்பாடும் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அது நடந்து முடிந்த தருணத்தில் புதிய மானுடத்தை நோக்கிய பயணமாகவே போல்ஷெவிக் புரட்சி அறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (பாரதி அதை யுக புரட்சி என்றார்). காலத்தை புரட்டி போட்டதோடு புதிய காலம் பிறப்பதற்கானஅறிவிப்பாகவும்அதுவிளங்கும் என்ற கனவும் எதிர்பார்ப்பும் சோசலிசம் என்றால் என்னவென்று அறியாதவர்கள் மத்தியிலும் அன்று இருந்தது. காலனிய ஆட்சிக்கு எதிராகவும் மன்னராட்சிக்கு எதிராகவும் செயல்பட துணிந்திருந்த ஆயிரமாயிரம் மக்கள் போல்ஷெவிக் புரட்சியை இவ்வாறுதான் புரிந்து கொண்டனர். துருக்கி, எகிப்து, மெக்ஸிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் நவீன கல்விமுறையில் பயின்று, தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தை மாற்றியமைக்க விழைந்த பல இளம் அறிவாளிகளுக்கும் ஜனநாயகத்தில் நாட்டமுடையவர்களுக்கும் இத்தகைய எதிர்ப்பார்ப்புகள் இருந்தன.

இந்திய சூழலில் சாதி எதிர்ப்பு மரபைச் சேர்ந்த சிந்தனையாளர்கள்தான் சாதி அடையாளம் கடந்த, அதனை துறந்த புதிய மானுடம் குறித்து பேசி வந்தனர், எழுதினர், பரப்புரை செய்தனர். அவர்களுக்கும் போல்ஷெவிக் புரட்சி என்ற அந்த நிகழ்வு முக்கியமானதாக தோன்றியது. போல்ஷெவிக் புரட்சி குறித்து 1917-18ஆம்ஆண்டுகளியேயே தமிழர்கள்அறிய வந்தனர் (பாரதியார் இது குறித்து விரிவாக எழுதினார். தேசிய இயக்க நாளேடுகளிலும் புரட்சி குறித்த செய்தகள் வெளிவந்தன.) சுய-மரியாதை இயக்கத்தை பொருத்தவரை, புரட்சிக்குப் பிந்திய ரஷ்யா குறித்த விரிவான செய்திகளை இயக்க ஏடுகள் 1928 முதற்கொண்டே தொடர்ந்து வெளியிட்டதுடன் அப்புரட்சி கண்ட மாற்றங்களையும் சாதனைகளையும் நமக்கானதாக எவ்வாறுஉட்செரித்துக் கொள்ளப் போகிறோம் என்பது குறித்தும் விவாதித்தன. குறிப்பாக, பெரியார் சோவியத் யூனியனில் முன்றுமாதக் காலம் தங்கிவிட்டு வந்த பிறகு அவரே இத்தகைய சாதனைகளை முன்வைத்து தமிழக, இந்தியச் சூழலில் நடக்க வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பேசினார். பார்ப்பனீயம், இந்துமதம், சாதிவரிசைஆகியவற்றைமறுக்கும் மாற்றங்களாக அமைந்து, புதிய சிந்தனை, செயல்பாடு, சுருங்கச் சொன்னால் புதிய மானுட ஓர்மை உருவாக இத்தகைய மாற்றங்கள் வழிவகுக்கும் என்பதை எடுத்துரைத்தார்.

பெரியாரும் சுய மரியாதை இயக்கத்தில் சோசலிச சிந்தனையுடையவர்களும் ரஷ்யா குறித்து மட்டும் எழுதவில்லை. சர்வதேச அளவில் நடந்த புரட்சிகர மாற்றங்களையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். குத்தூசி குருசாமியை ஆசிரியராக கொண்டு தொடங்கப்பட்ட ஆங்கில வாராந்திர ஏடான ரிவோல்ட்டில் உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பில் சர்வதேச அளவிலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் நடந்து வரும் புரட்சிகர செயல்பாடுகள், குறிப்பாக மதமறுப்பு, புரோகித-மறுப்பு செயல்பாடுகள் குறித்த கட்டுரை 1928இல் வெளியானது. அக்கட்டுரையின் தமிழ் வடிவம் குடிஅரசில் ஏற்கனவே வெளிவந்திருந்தது (7.10.1928). ரஷ்யா மட்டுமின்றி துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத்துக்கும் அரசதிகாரத்துக்கும் இருக்கும் உறவு துண்டிக்கப்பட்டதை இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டின. மதத்தின் செல்வாக்கை போல்ஷெவிக் புரட்சியாளர்கள் அழித்தொழித்ததையும் இந்த கட்டுரைகள் கவனப்படுத்தின.

1931இல் ஸ்பெயின் நாட்டில் தோற்று விக்கப்பட்ட குடியரசை பற்றிய கட்டுரை அக்குடியரசின் நிறைகுறைகளை விவாதித்து எழுதியது. மன்னராட்சிக்கு எதிராகவும் குடியரசாட்சிக்கு சார்பாகவும் நிற்கும்அரசியல் இயக்கங்கள் குறித்த செய்திகள், குறிப்பாக ஸ்டாலின்,ட்ராட்ஸ்கிஆகியோரின்வேறுபட்ட அரசியல் புரிதல்களினூடாக வெளிப்பட்ட குடியரசு ஆதரவு ஆகியன குறித்து இக்கட்டுரை பேசியது (குடிஅரசு, 15.1.1933). ஸ்பெயின் குறித்த வேறுவேறுகட்டுரைகள் தொடர்ந்துகுடிஅரசில் வெளியிடப்பட்டன -பாசிசத்தின் தோற்றம், அதன் பின்னணி ஆகியனவற்றை விளக்கி, விமர்சித்து எழுதப்பட்டக் கட்டுரைகளாகஇவை அமைந்ததுடன்,பாசிசத்தைஎதிர்க்கத் துணிந்த இடதுசாரிகளின் எழுச்சியான அரசியலையும் இவை போற்றின. சீனக் கம்யூனிஸ்டுகள் குறித்த கட்டுரைகளும் குடிஅரசில் மட்டுமின்றி,புரட்சி, பகுத்தறிவு ஏடுகளிலும் வெளியிடப்பட்டன (எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, சுமரியாதை சமதர்மம், விடியல், 2009 பதிப்பு, ப. 607).

சர்வதேச நடப்புகளை பற்றிய கட்டுரைகளிலும் கூட அத்தகைய நிகழ்வுகளை இந்திய சூழலுக்குரிய வகையில் நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்ற அக்கறையை பெரியார் உட்பட அனைத்து கட்டுரையாளர்களும் வெளிபடுத்தினர். ஸ்பெயின் பற்றிய கட்டுரையில் இது மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

ஸ்பெயினில் தற்சமயம் இருந்து வரும் குடி அரசுக்கு சற்று பலம் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அங்கு தற்சமயம் உள்ள குடிஅரசானது ஒரு வகை முதலாளி குடிஅரசு ஆகத்தான் இருக்கிறது. சென்ற 5, 6 வருஷ காலமாய் சென்னை மந்திரி சபைகளுக்கு எப்படியாதொரு கொள்கையுமில்லாமல் எப்படியாவதுஉத்யோகம் நிலைத்தால் போதும் என்கின்ற ஒரே “பலமான” கொள்கை மீது மந்திரிகள் நிர்வாகம் நடைபெற்று வந்தனவோ அது போலவே தான் ஸ்பெயின் குடி அரசு அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் நடந்து வருகின்றது. மக்களுக்கு உண்மை உணர்வு வந்து விட்டால் இம்மாதிரி கொள்கையற்ற ஆட்சி ஒழிந்து தான் தீரும். ...இந்தியாவிலோ கைராட்டினமும், கோவில் பிரவேசமும் தான் தாண்டவமாடுகின்றது. இதைத்தான் தேசியமாகவும், சுயராஜ்யமாகவும், குடி அரசாகவும், புரட்சியாகவும் பாமர மக்கள் கருதும்படிகாந்தியார்மூலம்நிர்வாகம்நடைபெற சில முதலாளிகளும், கோடீஸ்வரர்களும் பண உதவி செய்து வருகிறார்கள். ...நாளைக்கு ஏதாவது இந்தப் பணக்காரனையும், உத்யோகஸ்தனையும் திட்டி காலம் கடத்துவதற்கு ஏதாவது ஒரு இயக்கமோ கட்சியோ கிடைக்காதா என்று தேடவேண்டியதைத் தவிர வேறு ஒரு வேலையும் கிடைக்கப்போவதில்லை.... இத்தனைசந்தடியில் ‘கல்யாணசந்தடியில் தாலிகட்ட மறந்தது’ போல் பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கதி மறந்து போய் அவர்கள் என்றும் பதினாறாக வாழப் போகின்றார்கள் என்பதில் யாரும் கடுகளவு சந்தேகமும் படவேண்டியதில்லை (குடிஅரசு, 15.1.1933).

இத்தகைய கட்ரைகள் போக, 1930களில், லெனினின் வாழ்க்கை வரலாறு குடிஅரசில் தொடராக வெளிவந்தது. குடிஅரசில் வெளிவந்த லெனின் குறித்த சில கட்டுரைகள் பின்னர் நூலாகக் தொகுக்கப்பட்டு லெனினும் மதமும் என்ற தலைப்பில் வெளிவந்தது -டால்ஸ்டாய் பற்றிய லெனினின் கட்டுரையும் இதில் அடங்கியிருந்தது. டால்ஸ்டாய் பற்றிய லெனினின் கட்டுரைகள் பெரியாரை வெகுவாக கவர்ந்ததால் அது குறித்து அவர் விரிவாக எழுதினார். லெனின் டால்ஸ்டாய் குறித்து முன்வைத்த விமர்சனம் ஏறக்குறைய பெரியார் காந்தியார் பற்றி கொண்டிருந்த விமர்சன பார்வையை ஒத்ததாக அமைந்தது இதற்கு ஒருமுக்கிய காரணமாக இருந்தது (எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, ப. 606). ரஷ்யாவில் பெண்கள் நிலை, ரஷ்ய சிறைச்சாலைகள், ரஷ்ய கல்விமுறை என்று அந்நாட்டின் பலவேறு துறைகள் கண்டிருந்த மாற்றங்கள் குறித்து பெரியார் மட்டுமின்றி பிறரும் கட்டுரைகளை இயக்க ஏடுகளில் எழுதினர். இவைப் போக ரஷ்ய நிலைமைகள், புரட்சிக்குப் பிந்திய ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியன குறித்த ஆங்கில கட்டுரைகளும் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டன (மேலது நூல், ப. 606).

1940களில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட விவாதங்களிலும் ரஷ்ய முன்னுதாரணங்கள் முன்வைக்கப்பட்டன. இலக்குமிரதன் பாரதியின் கட்டுரை இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது -

ட்ராட்ஸ்கியின் ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலில் பேசப்படும் கருத்துகள் இங்கு முன்மொழியப்பட்டதுடன் திராவிட நாடு கோரிக்கையின் தர்க்கநியாயத்தை இடதுசாரிகளுக்கும் இந்திய தேசியவாதிகளுக்கு விளக்குவதாகவும் அமைந்தது (மேலது நூல், 971-976). அது போல வேறொரு கட்டுரையும்

-எஸ். சி. பரன் என்ற பெயரில் எழுதப்பட்ட கட்டுரையும் -தேசங்களின் சுய-நிர்ணய உரிமையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையாகும் (மேலது நூல், ப. 962-967). ரஷ்ய நடவடிக்கைகளை குறித்து இக்கட்டுரை நேரடியாக பேசாவிட்டாலும் தேசியம் குறித்து காங்கிரஸ்சோசலிஸ்ட்கட்சியினர்கொண்டிருந்த புரிதலானது அவர்கள் பாவிக்கும் சோசலிச அரசியலுக்கு உகந்ததல்ல என்ற வாதத்தை முன்வைத்தது.

போல்ஷெவிக் புரட்சி ரஷ்யாவில் மட்டுமின்றி சர்வதேசிய அளவில் சாதித்த அரசியல், சமுதாய மாற்றங்களை சுயமரியாதை இயக்கத்தின் அறிவாளர்களும் செயல்வீரர்களும் மிக முக்கியமான உலக நிகழ்வுகளாக கருதினர் என்பதில் ஐயமில்லை. பகசிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற கட்டுரையை சுய-மரியாதை இயக்க ஏடான பகுத்தறிவு வெளியிட்டமைக்காக கட்டுரையை மொழியாக்கம் செய்த ப. ஜீவானந்தமும் பகுத்தறிவு ஆசிரியராக இருந்த ஈ.வெ.கிருஷ்ணசாமியும்கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து, சாதி-எதிர்ப்பு, பார்ப்பனியஎதிர்ப்பு, பெண் விடுதலை, தாழ்த்தப்பட்டோர் விடுதலை ஆகியன பொருட்டு சுய-மரியாதை இயக்கம் செய்து வரும் பணிகளுக்கு கேடு விளைவிக்க விரும்பாத பெரியார், ஆங்கில அரசின் கண்காணிப்பையும் எதிர்ப்பையும் தவிர்க்கவே விரும்பினார். சமதர்ம கொள்கைகளை இனி தான் பிரச்சாரம் செய்ய போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்தார். அவரது வற்புறுத்தலின் பெயரால் ஜீவானந்தமும் கிருஷ்ணசாமியும் அரசுக்கு “மன்னிப்பு” கடிதம் எழுதிக் கொடுத்தனர் (மேலது நூல், 362-64). என்றாலும் தொடர்ந்து சோசலிச கருத்துகளும், ஏன் ரஷ்யா பற்றிய கட்டுரைகளும் குடி அரசில் வெளிவந்தன. அதாவது, ரஷ்ய நிகழ்வுகளை சுயமரியாதை இயக்கத்தினர் எத்தனை முக்கிய மானவையாக கருதினர் என்பதையே இது காட்டுகிறது.

புரட்சி சாதித்த மாற்றங்களை இந்திய சூழலுடன் பொருத்திப் பார்த்து சுயமரியாதை இயக்கத்தினர் விவாதித்த கருத்துகளில் முக்கியமானவற்றை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். குடி அரசில் வெளிவந்த ஓரிரு கட்டுரைகளின் சாராம்சம் மட்டுமே இங்கு எடுத்துக்காட்டுகளாக கொள்ளப்படுகின்றன.

***

குடிஅரசு இதழில் தான் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதி முதன்முதலில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது என்பதை நம்மில் பலர் அறிவோம். அந்த மொழி யாக்கத்துக்கு அவர் எழுதிய முன்னுரையின் முக்கியமான பகுதியாக இவ்வரிகளைக் கொள்ளலாம். தற்காலம் உலகில் ரஷ்யாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைற்றின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். ... ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்தினருக்கு இந்தியர்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலை யாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால்

இந்தியாவிலோ மேல் ஜாதியார்- கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை (குடிஅரசு, 4.10.1931).

உலகம்அனைத்துக்கும்விடுக்கப்பட்டஅறை கூவலாக விளங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கையை இந்திய சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, வர்க்க வேறுபாடுகள் குறித்த உண்மையை அறிய வொட்டாமல் சாதி ஏற்பாடுகள் அரணாக அமைந்து வர்க்க வேறுபாடுகளை உள்ளபடியே காப்பாற்றி வருகின்றன என்ற மிக நுட்பமாக இந்திய சூழலின் தனிச்சிறப்பான தன்மையையும் அதனை எதிர்க்கொண்டு அதனை மாற்றியமைக்க வேண்டிய தேவையையும் பெரியார் விளக்கு கிறார். இத்தாலிய புரட்சியாளரும் மிகச் சிறந்த மார்க்சிய அறிஞருமான அந்தோனியோ கிராம்ஷி வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல், பொருளாதார தளங்களில் காணப் படும் முரண்பாடுகளை ஒருவர் உணரா வண்ணம் குடிமைச்சமுதாயம் அல்லது சிவில் சொஸைட்டி என்பது ஒருகோட்டையாகநின்று அவற்றைப் பாதுகாப்பதுடன் அவற்றுக்கான நியாய வாதங்களையும் தொடர்ந்து கற்பித்து வருவதாக கூறுவார். பெரியாரும் ஏறக்குறைய சாதியின் பாத்திரத்தை இப்படித்தான் புரிந்து கொண்டார்.

சாதி சமுதாயத்தை மையப்படுத்தியும் அச்சமுதாயத்தின் பண்பு கூறுகளை, குறிப்பாக அறிவுலகில் பார்ப்பனிய சிந்தனைமுறையின் மொத்த வடிவமான இந்து மதம் செலுத்தி வரும் ஆதிக்கத்தை விமர்சித்துமே கம்யுனிச சிந்தனையை இந்திய சூழலில் வளர்த்தெடுக்க முடியும் என்பதைதான் பெரியாரும் குத்தூசி குருசாமி போன்றவர்களும் திரும்ப திரும்ப கூறினர். ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் ஐந்தாண்டு திட்டத்தின் நுணுக்கங்களை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் அத்தகைய திட்டமிடுதல் ஏன் இந்தியாவில் சாத்தியப்படாது என்பதை கவி ரவீந்தரநாத் தாகூரின் சொற்களைக் கொண்டு பெரியார் விளக்கினார்.

சில மாதங்களுக்கு முன் ரஷ்ய தோழர் ஒருவர் கவி. ரவீந்தரநாத் தாகூருக்கு நிரூபம் ஒன்று எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசத்தில் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எவைகள்? என்று வினவியிருந்தார். அதற்கு கவிதாகூர் “தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷ்ய நாட்டின் வெற்றிக்கு காரணம். சமுதாய விசயங்களில் முயற்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதேஎங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார் (குடிஅரசு, 23.7.1933).

ரஷ்யப் புரட்சி சாதித்த கூட்டுறவு முறையை மதிப்பிட்டு எழுதுகையில் அத்தகைய மாற்றங்கள் மனதளவிலும், செயலளவிலும் இருக்க வேண்டியதன் அவசியத்தை பெரியார் எடுத்துரைத்தார். கூட்டுறவாளர்கள் தினத்தன்று ஆற்றிய சொற்பொழிவில்ரஷ்யாவில் கூட்டுறவு வாழ்க்கைமுறைக்கு தரப்படும் முக்கியத்துவம், நகரங்களில் மக்கள் கூட்டுவாழ்க்கை நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், ஏற்பாடுகள் ஆகியவற்றை முக்கியமான சாதனைகளாகஅடையாளப்படுத்திப்பேசினார். கூட்டுறவு வாழ்க்கையின் தத்துவத்தை அவர் இவ்வாறு விளக்கினார்.

ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப்பற்றி பேசுபவன் என்று உங்களுக்கு தலைவர் எடுத்துச்சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கிய பாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒருகாலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளைக் கவனித்துப் பார்த்ததினால், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது எண்ணம் சாத்திய மாகக் கூடிய தென்பது மிக்க பலமாக உறுதிப்பட்டது. ...எனது முடிவான லக்ஷ்யம் அதாவது எனது எண்ணம் ஈடேறுமானால் அது உச்சஸ்தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகத் தானிருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம்.

கூட்டுறவு என்கிற உயரிய சரியான நிலையானது நம்முடைய நாட்டில் ஏற்பட்டுப்போனால் ஜனசமூகமானது கவலையற்று-சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வோம் என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைமையற்று குதூகுலமாகவாழவழிஏற்பட்டுவிடும்....கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது எவ்வாறு உதவி செய்வது என்கிறவிஷயங்களேநமதுவாழ்க்கையின்முக்கிய லக்ஷியமாய் இருக்கவேண்டும். என்பதாகும். இவைகளில் தனித்தனி மனிதனைப்பொறுத்த தத்துவம் என்பதே கூடாது... (குடிஅரச, 12.11.1933)

கூட்டுறவு வாழ்க்கைமுறையை சகாய வாழ்க்கை முறையாக அறிமுகப்படுத்திய பெரியார்அத்தகையசகாயவாழ்க்கைமுறையை நடத்த ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்டிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்துண்ணும் கூட்டுறவு சமையலறைகளையும் கூட்டு வசிப்பிடங்களையும் குறித்து விரிவாக எழுதினார். அதாவது கூட்டுறவுமுறையில் அமைக்கப்பட்ட ரஷ்ய பொருளாதார அமைப்புகளான கூட்டுப் பண்ணைகள், பொதுதொழிற்கூடங்கள் ஆகியவற்றை மட்டும் புரட்சி சாதித்த முக்கியமான சாதனைகளாக அவர் கருதவில்லை. பெண்களின் வேலை பளுவைக் குறைத்து அவர்களை குடும்ப வெளியிலிருந்து விடுவித்து பொதுவாழ்க்கைக்கு கொண்டுவர உதவும் பொதுசமையலறைகள் அமைக்கப்பட்டதை அவர் பாராட்டியதில் ஆச்சரியமேதும் இருக்க முடியாது. குடும்ப வாழ்க்கையும் சமையல் வேலைக்கென செலவிடப்படும் நேரமும் பெண்கள் சமூக பணிகளிலும் அறிவுப்பணிகளிலும் ஈடுபடுவதற்கு முட்டுக்கட்டைகளாக இருப்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்.

ஏற்றத்தாழ்வின்றி மக்கள் அனைவரும் சேர்ந்து வாழும் பொது வசதிகளுடைய குடியிருப்புகளையும் ரஷ்ய அரசு அமைத்திருந்ததை முக்கியமான சாதனையாக அவர் கருதியதையும் நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். வாழ்விடமும் வசிப்பிடமும் சாதி அடையாளத்தை அறிவிக்கும் குறியீடுகளாக உள்ள சமுதாயத்தில் சாதி, வர்க்க வேறுபாடின்றி மக்கள் அனைவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின் தேவை, அதன் சாதகமான கூறுகள், அத்தகைய வாழ்க்கை முறையானது அழகும் ஓழுங்கும் கூடியதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையெல்லாம் ரஷ்ய எடுத்துக்காட்டைக் கொண்டு அவர் நிறுவ முனைந்துள்ளதை சாதிய சமூகத்தின் வாழ்க்கைப் பண்பாட்டை பற்றிய விமர்சனமாகவும் அதற்கான மாற்று என்பது சாத்தியம்தான் என்பதை நிறுவிக்காட்டும் புரிதலாகவும் நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

பெரியார் மட்டுமின்றி சுய மரியாதை இயக்கத்துடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பல அறிவாளர்களும் ரஷ்ய நிலைமைகளுடன் இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு எழுதினர் என்று ஏற்கனவே கூறினோம். சோசலிசம் வறட்டு சிந்தாந்தமாக குறைக்கப்பட்டு வெறும் கோஷமாகவும் விதியாகவும் உருமாறிவிடக்கூடாது என்ற அக்கறையிலேயே பலர் எழுத முன்வந்தனர். பெரியாரும் இதைதான் பலமுறை வலியுறுத்தினார். இதனால்தான் அவர் தொழிலாளர்கள் குறித்துப் பேசும் போது தொழிலாளியின் மனநிலையை அவன் செலுத்தும் உழைப்பும், உழைப்புச் சூழலும் மட்டுமின்றி அவன் சார்ந்திருக்கும் சாதியும் வடிவமைக்கின்றன என்பதை சுட்டிக் காட்டினார். 1940இல் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் கூலிக்காக மாரடிக்கும் தொழிலாளியின் தேவைகள், ஆசைகள், அவன் சந்திக்கும் ஒடுக்குமுறை, அவனை வருத்தி கசக்கிப் பிழியும் முதாளித்துவ வேலைமுறை ஆகியனவற்றின் பயனாய் அவன் வர்க்கவுணர்வு பெறுகிறான் என்பதை அவர் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளவில்லை (விடுதலை, 16.2.1940). அவன் தான் சந்திக்கும் ஒடுக்குமுறையை குறித்து யோசிக்கையிலும்கூட, தனது விடுதலை பற்றிய எண்ணத்தைக் காட்டிலும் தான் சாதிப்படிநிலை அமைப்பில் ஏற்றம் பெறுவதையும் எத்தகைய ஏற்றம் தனக்கு சாத்தியப்படும் என்று எண்ணி செயல்படுவதையும் பற்றியே கவலைக் கொள்வான் என்பதே அவரின் வாதமாக இருந்தது. இதனால்தான் பொதுவுடைமை வேறு, பொதுவுரிமை வேறு என்றும் அவர் வாதிட்டார். பொதுவுடைமை என்பது கணக்கு சம்பந்தப்பட்ட ஒன்று என்றும், பொதுவுரிமை என்பது பண்பு சம்பந்தப்பட்டது என்றும், பிறவியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அதிகாரங்கள் ஆகியவற்றை மறுத்து அனைவருக்கும் பொதுவான அறத்தையும் உரிமையையும் முன்வைக்கும் பொது தர்மமானசமதர்மம் என்பதுதான்இந்தியாவில் பொதுவுடைமை தத்துவத்தையும் அது சாதிக்க நினைக்கும் மாற்றங்களையும் நிலைநிறுத்தி பொதுநீதி,சமத்துவம்ஆகியவற்றை நிலைநாட்ட உதவும் என்றும் விளக்கினார் (குடிஅரசு, 25.3.1944).

ரஷ்யப் புரட்சியின் சிறப்பை, வரலாற்று முக்கியத்துவத்தை சுயமரியாதை இயக்கத்தினர், குறிப்பாக பெரியார் திரும்ப திரும்ப வலியுறுத்தியதை நாம் இன்று நினைவுகூர்கையில் அன்று அவர்கள் செய்ய முனைந்ததை பற்றிய முழுப் பார்வையை ஏற்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. சாதி சமுதாயத்தில் உழைப்பு, உழைப்பாளி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள இடம், பாத்திரம், அவர்களின் சமூக அடையாளத்தை நிர்ணயிக்கும் சாதி பற்று, உறவுகள், மணச் சடங்குகள், குறிப்பாக அகமணமுறை, பிள்ளைப்பேறு ஆகியவற்றுக்கும் சொத்து சேகரிப்பதற்கும் உற்பத்தி களத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க வர்க்கவுணர்வுக்கும் இடையிலான உறவு, சாதி அமைப்பின் அனைத்து கூறுகளையும் இணைத்து அவற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய கருத்துநிலைக்கும் அரசதிகாரத்துக்கும் இடையிலான உறவு, பொருளாதார மாற்றங்கள் என்பன சாதி ஆதிக்கவுணர்வையும் சாதியை துறக்க உதவும் சமூக மாற்றங்களையும் ஒருசேர உருவாக்கும் போக்கு ஆகியன பற்றிய சுயமரியதை இயக்கத்தினரின் புரிதலை நாம் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குகொண்டுசென்றிருக்கவேண்டும். ஆனால் தவறிவிட்டோம்.

மத மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி அழிப்பு, பெண் விடுதலை ஆகியன குறித்த பார்வையை வளர்த்த சுயமரியாதை மரபு சோசலிசத்துடன் நடத்திய உரையாடல்கள், குறிப்பாக ரஷ்ய முன்மாதிரியை முன்வைத்து தொடுத்த வாதங்கள், கேள்விகள் ஆகியவற்றை மீள்பரிசோதனை செய்து வர்க்கம்,சாதி,சொத்து, சமூக இழிவு, மேலாண்மை, மதம் பற்றிய நமது கெட்டித்ட்டி போன பார்வையை தளர்த்திக் கொண்டு இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான பெரியாரின் நுட்பமான வாதங்களை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனாபூர்வமாகவும் வாசிக்கவும் விவாதிக்கவும் முன்வருவோம்.

Pin It

மற்ற நாட்டில் மனிதனிடம்மனிதனுக்குப் பற்றும் அன்பும் உண்டாகவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும் வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன. -பெரியார்

அந்தத் தேர் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. ஆதிக்கம், மூடத்தனம், வெறுப்புணர்வு, பகைமை, வன்மம் நிறைந்தவர்கள் அதற்காக தம் பலமனைத்தையும் திரட்டுகின்றனர். இப்போது வரை அந்த தேரை அசைக்க முடியவில்லை என்றாலும் அவர்களது முயற்சி மிகத் தீவிரமானதாகவும் தீவிரவாதத் தனமானதாகவும் இருக்கிறது. பாகுபாட்டையும் சக மனிதரை ஒடுக்குவதையும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட அவர்களது கிளைகள் எங்கும் பரவுவதைப் பார்க்கிறோம். அவர்களது வன்ம வேர்கள் இந்த ஜனநாயகப் பூமியைப் பதம் பார்க்கின்றன. இந்நாட்டின் ஜனநாயகம் முற்றிலுமாக வேரறுக்கப்படும் சேரிகள் தொடங்கி அதை நிலைநிறுத்தும் பேரதிகாரத்தைக் கொண்ட நாடாளுமன்றம் வரை எங்கும் அவர்கள் வியாபித்துவிட்டனர்.

சனாதன தர்மம் எனும் கதிர்வீச்சு ஒவ்வொரு மூளைக்குள்ளும் ஊடுருவிப் பாய்ச்சப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு அறச்சிதைவு வரலாறு கொண்ட இந்நாட்டை பண்படுத்தும் முயற்சியில் சாத்தியப்படுத்தப்பட்ட புரட்சிகள் அனைத்தும் வேகமாக சிதைகின்றன. படித்த சமூகம் பண்பட்டதாக மாற வேண்டிய இயற்பியல் விதி இங்கு தோல்வியுற்றது. நேரில் பின்பற்றும் அத்தனை மூடத்தனங்களையும் அடிப்படை வாதத்தையும் இணையத்திற்கும் ஆப்களுக்கும் கடத்தி வாழத் தலைபட்டிருக்கிறது இத்தலைமுறை. வரன்கள் சாதிக்கேற்ப வலைதளங்களில் தேடப்படுகின்றன. முக நூலிலும் வாட்ஸப்பிலும் சாதி இழிவும் மத இழிவும் அரங்கேற்றப்படுகின்றன. கலவரங்கள் விரும்பப்படுகின்றன. அழிவுவேண்டப்படுகிறது. தன் ரத்தம் இல்லாதவர்களை கொன்றழிக்கும் நாஸி வன்மம் படித்து முன்னேறிய நாகரிக (!) இந்தியர்களால் வெளிப்படையாக உமிழப்படுகிறது. இவ்வாறே சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என மூன்று தூண்களைக் கொண்டு ஜனநாயகத்தை நிறுவிய அண்ணலின் தேர் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. அது நகரவில்லை என்றாலும் நாம் பார்க்க பார்க்க அது மூர்க்கத்தனமாக இழுக்கப்படுகிறது.

periyar ambedhar 6001956ஜூலை31அந்தசெவ்வாய்க்கிழமையில், புது டெல்லி அலிப்பூர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கர் இவ்வாறு சொன்னார்.

“நான்என்னவெல்லாம்செய்திருக்கிறேனோ, அவற்றை, என் வாழ்க்கை முழுவதும் எதிரிகளுடனானபோரில்விளைந்தநொறுக்கும் துயரங்கள் மற்றும் முடிவில்லா பிரச்னைகளை கடந்துவருவதன்மூலமேசெய்யமுடிந்திருக்கிறது. மிகப் பெரிய சிரமங்களுடன் நான் இந்த தேரை, அது நிற்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். அதன் பாதையில் வரப் போகும் தடைகள், புதைகுழிகள் மற்றும் இடர்களைக் கடந்து இந்த தேர் முன்னோக்கி, மென்மேலும் நகர வேண்டும். என் மக்கள், என்னுடைய படைவீரர்கள் இந்த தேரை முன்னோக்கி நகர்த்த முடியாமல் போனால் அவர்கள் அதை அது நிற்கும் இடத்திலேயே விட்டுவிட வேண்டும், எந்த சூழலிலும் இந்த தேர் பின்னோக்கி நகர அவர்கள் அனுமதித்துவிடக் கூடாது”

டாக்டர்.அம்பேத்கர், தேர் என குறிப்பிட்டது சமத்துவத்தை, ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளை, சமூக நீதியை, சமா தானத்தை, சுயமரியாதையை சாதி/மத ஆதிக்கத்திற் கெதிரானப் போரை. அந்த தேர் முன்னோக்கி மிக நிச்சயமாக நகரவில்லை என்பது நாமறிந்ததே. நல்வாய்ப்பாக, அம்பேத்கர் எங்கு விட்டுச் சென்றாரோ அங்கேயே நிற்குமாறு இந்நாட்டின் மிக சொற்பமான சாதி/மத எதிர்ப்பு சமத்துவவாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்துமதத்தினரால்/பார்ப்பனர்களால்/சாதி இந்துக்களால் பாரம்பரிய இந்துயிஸத்தின் அத்தனை வன்மங்களும் நவீனத் தளங்களுக்குக் கடத்தப்படுகின்றன. அவ்வகையிலேயே இந்நாட்டில் இந்துத்துவம் புத்தெழுச்சி பெறும் கெடுவாய்ப்பு இங்கு உருவாகியிருக்கிறது.

இந்துத்துவம் ஒரு மதமே இல்லை, அது மனிதர்களை பிரித்தாள்வதற்கான வஞ்சக ஏற்பாடு என்றார் அம்பேத்கர்.

-சாதியாக பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கஇந்துமதம் ஒழிய வேண்டுமென்ற உண்மையை இவ்வுலகத்திற்கு உரக்கக் கூறினர் இருவரும். ஆனால் இன்றோ, சாதியாக பிரிந்திருக்கும் மக்களை இந்தியர்களாக அணிதிரட்ட, இந்து என்ற சட்டகத்திற்குள் எல்லோரையும் இழுத்து அடைக்கின்றனர் இந்துத்துவவாதிகள். கடந்த கால் நூற்றாண்டு கால ‘வளர்ச்சி’ காலத்தில் மதவாதம் கூர்மை யடைந்துள்ளது அதிர்ச்சிக்குரியது.

அம்பேத்கர் நூற் றாண் டு கண்ட 1990களின் சமகால சமூகப் பொருளாதார மாற்றமான உலகமயமாக்கலின்விளைவாக நிகழ்ந்த கல்வி பரவலாக்கம், தனியார்த்துறை வேலைவாய்ப்புகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, எந்திரமயமாக்கல், சுதந்திர வர்த்தகம், இணையப் பரவலாக்கம் எல்லாமே சமூகநீதிப் புரட்சியாளர்களான அம்பேத்கரும், பெரியாரும் இங்கு விதைத்த இந்துமத இழிவை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கின்றன. சாதிகளாகதம்மை அடையாளப்படுத்திகடந்த தலைமுறையின் வாரிசுகள் கூடுதலாக தம்மை இந்துக்கள் என பிரகடனப்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்து என்ற மேல்பூச்சின் அடியில் தமது சாதியக் குறியீடுகளை மறைத்துக் கொள்வதன் மூலம் தம்மை சாதி பார்க்காதவர்களாக, முன்னேறியவர்களாக, நாகரித்தை அடைந்துவிட்டவர்களாகக் காட்டிக் கொள்ள பலரும் முயல்கின்றனர்.

மேலே குறிப்பிட்ட உலகமயமாக்கலின் கூறுகளை அதிகம் விரும்பி, அதிகளவில் ஏற்று அதனால் பயனுற்ற (பெருமளவில் சாதி இந்துக்களை உள்ளடக்கிய) படித்த இந்தியர்கள், மனிதப் பேரிழிவுகளான இந்துமதம், பார்ப்பனியம், வருணாசிரமம், சாதிப் பாகுபாடு ஆகியவற்றுக்கு பொதுத் தளத்தில் வெளிப்படையான பேராதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர். அறுபதாண்டுகால குடியரசின் முதல் முப்பதாண்டுகளில் நாம் காணாத இந்துமத ஆதரவுப் போக்கு புத்தெழுச்சிக்கான வாய்ப்பை நல்கியிருக்கிறது. மிகக் குறிப்பாக கற்றறிந்தவர்களென நாம் நம்பிக் கொண்டிருக்கும் சமூகம் அத்தனை பிற்போக்குத் தனங்களையும் பாகுபாடுகளையும் வாழ்வியல் அறமாக வரித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. உலகமயமாக்கலால் உருவான பொருளா தாரப் புரட்சியான தாராளமயமாக்கல், கிராமப் புறங்களின் ஊர்களில் ஆதிக்கத்தோடு இருந்த சாதி இந்துக்களை நகரங்களின் பணக்காரர்களாகவும் நடுத்தர வர்க்கத்தினராகவும் மாற்றியது.

நகர்ப்புறங்களுக்கு வந்த சாதி இந்துக்கள், தமது சாதியின் வேர்களை ஊர்களிலும் தமது மூளைகளிலும் படரவிட்டுக் கொண்டிருந்தனர் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர்கள் ‘புத்தெழுச்சி’ காலத்தின் புதிய இந்துக்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். ஊர்களில் இருந்தவரை இவர்கள் சிறுதெய்வ வழிபாட்டைபண்பாடாகக் கொண்டிருந்தனர். ஆனால் நகரங்கள் இவர்களை இந்துக் கடவுள் களின் தீவிர பக்தர்களாக்கின. பார்ப்பனர்களைப் பின்பற்றி போலச் செய்தலில் பார்ப்பனர்களை மிஞ்ச முயன்றனர். அன்றாடம் பூஜைகள் செய்வது, சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுவது, இந்துமதப் பெருங்கடவுள்களை வழிபடுவது என முற்றிலுமான இந்துக்களாக தம்மை வரித்துக் கொண்டனர். மூளையை நகரத்திலும் இதயத்தை கிராமத்திலும் வைத்துக் கொண்டு இரட்டை வாழ்க்கை வாழ்ந்தனர். இந்த இரண்டு வாழ்க்கையில் அவர்கள் விட்டுக் கொடுக்காத விஷயங்களாக மதமும் சாதியும் இருந்தன.

கிராமங்களில் இந்த மூடத்தனங்கள் இல்லையா என்றால் இருந்தனவே. அங்கும் சாமியாடிகள் இருந்தனர், அங்கும் குறிசொல்லிகள், பூசாரிகள் இருந்தனர். அங்கும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் இவர்கள் யாரும் தம்மை இந்துக்களாக பண்பாட்டு ரீதியாகஅடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. படித்த, நடுத்தர வர்க்க சாதி இந்துக்கள் இன்று தம்மை இந்து என அழைத்துக் கொள்ள மிகவும் விரும்புகின்றனர். அது நகரங்களில், வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் பாதுகாப்பையும் கவுரவத்தையும் அளிக்கிறது. சாதி இந்துக்களை பின்பற்றி தலித்துகளையும் பழங்குடியினரையும் கூட இந்த நோய் பீடித்தது தான் பெருந்துயரம்.

டெல்லியில் உள்ள செண்டர் பார் டெவலப் மெண்டல் ஸ்டடீஸ் மையத்தின் லோக்நிதி என்றமிகவும்ஆதாரப்பூர்வமானதகவல்திரட்டு நிறுவனம் 2004மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் செய்த தேசிய தேர்தல் ஆய்வில் இந்தியர்களின் மத நம்பிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்தஆய்வு வர்க்கம், சாதி மற்றும் கல்வி ஆகிய மூன்று அடிப்படைகளில் செய்யப்பட்டது. 2004இல் நடத்திய ஆய்வில் மேல்வர்க்க மற்றும் நடுத்தர வர்க்க இந்துக்களில் 60 சதவீதம் பேர் தாங்கள் தினமும் பூஜை செய்வதாகக் கூறினர். ஏழைகளின் அளவு 3040% இருந்தது. சமூக நிலைப்படி - வருணா சிரமத்தில் ‘இரு பிறப்பாளர்’களான பார்ப்பன, வைசிய, சத்திரியர்களில் 58% பேர் மிகுந்த மத நம்பிக்கைக் கொண்டவர்களாக தினமும் பூஜைகள் செய்ய தலித் மற்றும் பழங்குடியினர் 35% மட்டுமே அதே முறையை பின்பற்றினர். கல்வி அடிப்படையில் பார்த்தாலும் கல்லூரி படிப்பு வரை முடித்தவர்களில் 53% பேர் தினசரி பூஜைகள் செய்கின்றனர். கல்லாதவர்கள் 38 சதவிகிதமும் தொடக்கக் கல்வி பெற்றவர்கள் 46% பேரும் வழிபாடுகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டது . இந்த புள்ளிவிபரம், படிப்பறிவு பெற்று பொருளாதார நிலையில் முன்னேறிய, ஆதிக்க சாதியினரிடையே மதப்பிடிப்பு அதிகமுள்ளதை நிரூபிக்கிறது. ஆனால் பொதுவாக அவ்வாறு நம்பப்படுவதில்லை. படித்த இந்தியர்கள் பகுத்தறிவு பெற்றுவிட்டதைப் போன்ற ஒரு மாயை இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதில்அச்சுறுத்தும்விஷயம்என்னவென்றால் இதே நிறுவனம் 2009இல் இதே போன்றதொரு ஆய்வை மேற்கொண்டதில், பணக்கார, படித்த சாதி இந்துக்களின் மத நம்பிக்கை அப்படியே இருக்க, ஆதிவாசிகள் (43%) மற்றும் தலித்களின் (40%) இந்துமத நம்பிக்கை ஐந்தாண்டுகளில் கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்திருப்பதாகக் கண்டறிந்தது. தீண்டாமையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அவர்களது மனக்குமுறலும் பரவும் இந்துமயத்தில் தன்னையறியாமல் ஈர்க்கப்படுதலுமே இதன் பின்னணியில் உள்ள சமூகக் காரணங்கள்.

கிராமப்புறங்களில் கோவில்களுக்குள் அனுமதி மறுக்கப்படும் தலித்கள், ஊருக்கு வெளியேஎங்கோ தொலைவில்உள்ள இந்துமத ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களால் சாதி இந்துக்களுடன் சேர்ந்து வழிபட முடிகிறது. அந்த சமூகக் கலப்பு சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டதால் உண்டானக் காயங்களுக்கு மருந்திடுவதால் தலித்கள் தம்மை மதப்பிடிப்பாளராகக் காட்டிக் கொள்ள தலைபடுகின்றனர். பொருளாதார முன்னேற்றம் தலித்களின் சமூக இழிவை துளியளவுக்கூட மாற்றாத நிலையில்பூஜைகளும், தொடர்ச்சியான வழிபாடுகளும், விரதம் போன்ற சம்பிரதாயங்களும், மாலை போடுதல், பாத யாத்திரை போன்றவையும் தங்களுக்கு மரியாதையை தருவதாகக் கருதுகின்றனர். சாதி இந்துக்களோடு தோளோடு தோள் இணைந்து நிற்கும் பொது மத வழிபாடுகளில் தலித்களின் எண்ணிக்கைஆண்டுக்குஆண்டுஅதிகரிக்கிறது. அதோடு இந்த குறிப்பிட்ட காலத்தில் ஆர்.எஸ். எஸ், இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் தலித்களின் மனதில் அவர்களும் ‘இந்துக்களே’ என்ற மூளைச்சலவையைத் தீவிரப்படுத்தியதும் ஒரு முக்கியமான காரணம். ஷாகா போன்ற வகுப்புகள் மூலமாக அவர்கள் தலித் இளைஞர்களிடையே இந்துமத உணர்வையும் வெறியையும் விதைக்கத் தொடங்கினர்.

ஆதிவாசிகளின் சூழல் இக்காலகட்டங்களில் முற்றிலும் வேறானதாக இருந்தது. இந்துத்துவ வாதிகள் கிறித்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறிய பழங்குடியினரை மையப்படுத்திவேலை செய்தனர். கர் வாப்ஸி என அழைக்கப்படும் தாய்மதத்திற்கு திரும்புதல் என்ற சூழ்ச்சி அறிவிக்கப்படாமலேயே நிகழ்த்தப்பட்டது. பழங்குடியினர் அடையாளத்துடன் இருந்து காலனிய ஆட்சியில் கிறித்தவத்துக்கு மாறிய பழங்குடியினர் 1990களின் பிற்பகுதியில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்து மதத்துக்கு மாற்றப்படும் சூழ்ச்சிகள் அரங்கேறின. இதற்காக இந்துத்துவ அமைப்புகள் தீவிரமாக பணி செய்தன. அசீமானந்தா போன்ற இந்து சாமியார்கள் ஆதிவாசியினரை இந்துக்களாக மாற்றும் வேலையை வெற்றிகரமாகச் செய்தனர். மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளியான அசீமானந்தாவை பேட்டி கண்டு அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை ’தி கேரவன்’ இதழில் விரிவானக் கட்டுரையாக எழுதினார் அதன் நிர்வாக ஆசிரியர் லீனாகீதா ரெகுநாத். அந்த வாக்குமூலத்தில் பழங்குடியினர் பெருமளவில் வாழும் குஜராத்தின் டேங்க்ஸ் மாவட்டத்தில் அசீமானந்தா நிகழ்த்திய இந்து வெறியாட்டங்கள் பற்றி வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

1998இல் இந்த பகுதிக்கு சென்று ஆசிரமம் அமைத்த சங் உறுப்பினரான அசீமானந்தா, கிறித்தவத்தை பற்றியும் கிறித்தவ மதத்தைப் பற்றியும் மோசமானக் கருத்துகளைப் பரப்பினார்.அவ்வாண்டின்கிறிஸ்துமஸ்நாளில் பள்ளிகளும் தேவாலயங்களும் இந்துத்துவ வெறியர்களால் தாக்கி சிதைக்கப்பட்டன. வீடுகள் நொறுக்கப்பட்டன. கிறித்தவ மற்றும் முஸ்லிம் பழங்குடியினரின் வர்த்தம் அழிக்கப்பட்டது. இப்படியாக நடந்தேறிய வன்முறைகளுக்கிடையில் டிசம்பர் மத்தியில் தொடங்கி 1999 ஜனவரி மத்திம காலம் வரை வெறும் 30 நாட்களில் சுமார் 40,000 கிறித்தவப் பழங்குடியினர் இந்துமதத்திற்குமாற்றப்பட்டனர். அப்போது சுமார் 30 சர்ச்சுகள் இடிக்கப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டதாக அசீமானந்தா இந்த வாக்குமூலத்தில் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இதுவொரு சிறிய எடுத்துக்காட்டுத்தான். இந்த 25 ஆண்டுகளில் வடக்கிலும் வடகிழக்கிலும் பழங்குடியினர்பெருமளவில் கட்டாயமதமாற்ற வன்முறையை அனுபவித்துள்ளனர். அசீமானந்தா போன்றவர்களின் மூளைச்சலவையால் ஒருகட்டத்தில் தாம் ’இந்துக்களே’ என அவர்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

இப்படியாக தலித்களையும் ஆதிவாசி களையும் உள்ளடக்கி இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிரான இந்து ராமராஜ்யத்தைகட்டமைக்கும் சதியில்மெல்ல வெற்றியை ருசிக்கின்றனர் இந்து வெறியர்கள். கோவை குண்டுவெடிப்பு, குஜராத் கலவரம் என எங்கெல்லாம் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனரோ அங்கெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டவர்கள் பெருமளவில் தலித்களே. ஷாகா வகுப்புகளிலும் பல்வேறு மத மூளைச்சலவைக் கூட்டங்களிலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை விதைப்பதுதான் ஒற்றைக் குறிக்கோள். கோவை, குஜராத் கலவரங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்ட தலித்கள், இன்றளவிலும் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். தலித்களையும் ஆதிவாசிகளையும் வைத்து இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் தாக்குவதன்மூலம்’அடிமையையும் எதிரியையும்’ ஒரே கல்லில் வீழ்த்தும் சூழ்ச்சியில் வெற்றி பெறுகின்றன இந்துத்துவ அமைப்புகள். சாதியால் இழந்த மரியாதையை மதத்தால் பெற்றுவிடலாம் என நம்பி இந்துக்களாக புத்துயிர் பெறும் தலித்கள், இந்துமதத்தின் ஆண்டாண்டுகாலக் கள்ளச் சதியின் நவீன சூழ்ச்சிகளில் புதிய முறைகளில் வதைபடுகின்றனர்.

பண்பாட்டு ரீதியாக மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர்களாக மக்களை மாற்றியதன் மூலம் அரசியல் தளத்தில் அதை வாக்குகளாக அறுவடை செய்தது பாரதிய ஜனதா கட்சி. பொருளாதார ரீதியாக முன்னேறிய படித்த, சாதி இந்துக்களின் பேராதரவை மட்டுமே பெற்ற பா.ஜ.க கடந்த தேர்தலில் வெற்றி பெறக்காரணம் எல்லா படிநிலைகளிலும் இந்து மத நம்பிக்கை அதிகரித்ததே! சங் பரிவாரத்தின் பிரச்சாரமான ’இந்துத்துவம் ஒரு மதமல்ல அதுவொரு வாழ்க்கைமுறை’ என்ற பொய்யை நம்பி, ஏற்று அதை செயல்படுத்த படிக்காத இந்தியர்களும் படித்த இந்தியர்களும் முனைப்புக் கொண்டதன் தீயபலன் அது. இவர்கள் அனைவருமே, ’இந்தியா இந்துக்களின் நாடு’ என நம்பத் தொடங்கியதிலிருந்து இங்கே மதசார்பின்மைக் கொள்கைஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் படித்தவர்களின் ஊழலைக் காப்பாற்றி படிக்காதவர்களின் கோபத்தை ஆற்றுபடுத்தும் வேலைகள் நடக்கின்றன. கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே காலச் சூழலில் ஏழைகள்/தலித்கள் மென்மேலும் நலிந்து நாசமாகின்றனர். ஆனால் இருவரையும் இணைக்கும் பாலமாகஇந்துமதம் செயல்படுகிறது.

உலக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அத்தனை பலன்களையும் அனுபவிக்கும் தலைமுறையாக இது இருக்கிறது. சுதந்திர வர்த்தகத்தால் உலகின் எந்த மூலையில் இருந்தும் எதையும் வாங்கிவிட முடிகிறது. சந்தை என்ற அளவில் இங்கே கலப்பிற்கு பஞ்சமில்லை. ஆனால், சமகால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பழைய பிற்போக்குத்தனங்களை சிதைக்கவில்லை. மாறாக, கூடுதலான புதிய பிற்போக்குகளை அவை தோற்றுவித்திருக்கின்றன. சிலை வழிபாடும், கடவுள்மனிதர்களும், விலங்குபலியும் பரிகாரங்களும் கிரக/நட்சத்திர நம்பிக்கைகளும் படித்தவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சத்குரு ஜக்கி வாசுதேவ், அமிர்தானந்தமயி, பாபா ராம்தேவ் என நீளும் கார்ப்பரேட் சாமியார்கள் இந்துமதவன்மத்தைஇளகியதாக, ஒரு மாறுபட்ட வடிவத்தில் படித்தவர்களுக்கு கடத்தும்வேலையைக்கச்சிதமாகச்செய்கின்றனர். ஷாகா வகுப்புகளில் மத மூளைச்சலவைக்கு ஆளாக்கப்படும் படிப்பறிவற்ற அடித்தட்டு மக்களுக்கும், யோகா வகுப்புகளில்வீழ்த்தப்படும் படித்த முன்னேறிய சமூகத்தவருக்கும் ஒரு வேறுபாடுமில்லை. இரண்டு இடங்களுக்கும் ஒரே குறிக்கோள், ஒரே நோக்கம், ஒரே இலக்கு. அது இந்து உளவியலை கட்டமைப்பது.

இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி இந்திய அரசு தனியொரு மதத்திற்கு ஆதரவாகச் செயல்படக்கூடாது. மாறாக மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும். ஆனால் அரசால் நிதியளிக்கப்பட்டு எல்லா தளங்களில் இந்துமதவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. அண்மைக் காலங்களில் இந்துமதத்தை வளர்த் தெடுப்பதற்கான நிதியுதவியை அரசு மற்றும் கார்ப்பரேட்டுகள் நேரடியாக வழங்குவது மிக வெளிப்படையாக நிகழ்கிறது. யாகங்களுக்கும், சொற்பொழிவுகளுக்கும், யோகா வகுப்புகளுக்கும் மக்களின் வரி பணமே வாரி இரைக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு நாடே யோகா செய்தாக வேண்டிய நிர்பந் தத்திற்கு ஆளானது. மத விழாக்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்கு மானியங்கள் வழங்கப் படுகின்றன; 2012 ஆம் ஆண்டு முக்திநாத் மற்றும் கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை போகும் இந்துக்களுக்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை தமிழக அரசு ஏற்கும் என ஜெயலலிதா அறிவித்தபோது அதை வி.ஹெச்.பியும், பஜ்ரங்தளும் பாராட்டின. அது மட்டுமல்ல, கோவில்கள், ஆசிரமங்கள் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளுக்கு நிலமும், அரசு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் உடனடியான அரசு அனுமதியும் கிடைக்கிறது. இந்தியாவின்பிரபல தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்களில் பலரும் இந்துமதச் செயல்பாடுகளுக்கு பெரும் நிதியை அளித்து வருகின்றனர். இந்நாட்டின் பிரதமர் மத ரீதியாக எதை அறித்தாலும் மக்களிடம் அவ்விஷயம் போய்சேர சினிமா பிரபலங்கள் அதை முன்மொழிய நிர்பந்திக்கப் படுகின்றனர். இவ்வளவுகளுக்கு மத்தியிலும் படித்த இந்தியா சாதி பார்ப்பதில்லை என கூறப் படுகிறது. நகரங்களில் வாழும் மனிதர்களுக்கு சாதியுணர்வே இருப்பதில்லை என வாதிடப் படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் தம் இதயத்தை ஒன்று ஊரிலோ அல்லது சேரியிலோ வைத்திருக்கின்றனர். ஊரானது ஒருவரின் ஆதிக்க அடையாளமாகவும் சேரி ஒருவரின் அடிமைக் குறியீடாகவும் தொடர்ந்து நீடிக்கிறது. எல்லோரும் கலந்து வாழும் சமத்துவக் கிராமங்கள் அரசியல் ஜனநாயகம் நிறுவப்பட்டு இந்த எழுபதாண்டுகளில் சாத்தியப்படவே இல்லை. இந்த கட்டமைப்பை கட்டிக் காக்கும் படித்த இந்தியா ‘ நாங்கள் இந்தியர்கள்’ என முகநூல்களில் தொண்டைகிழிய முழங்குவது எத்தனை முரணானது?  

ஏன் இந்நாடு என்னை போன்ற மனிதரை தீண்டத்தகாதவராக வைத்து என கேட்கவே கேட்காதவர்கள், பாகிஸ்தான் எதிர்ப்பு முழக்கங்களில் தலித்கள் முன்னாள் நின்றுகோஷம் போட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். அப்பன்களும் பாட்டான்களும் ஊர்களில் நிறுவிய ஆதிக்கத்தை கல்விக்கூடங்களுக்கும் அலுவலகங்களுக்குள்ளும் இழுத்து வந்ததுதான் படித்த இந்தியர்களின் ஆகப்பெரும் சாதனை. இவர்கள் சமூக வலைதளங்களில் சாதிக்கொரு குழுவை வைத்துக் கொண்டு பாரம்பரிய வன்மத்தை நவீன முறைகளில் கக்குகின்றனர்.

இப்போது மட்டுமல்ல இனிவரும் காலங் களிலும் சாதிப் படிநிலை நீடித்திருக்கவும் பார்ப்பனியம் தழைத்திருக்கவும் இந்துமதம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். இந்துமதம் உயிர்த்திருக்க வேண்டுமெனில் ஆதிக்கவாதியும் அடிமையும் ஒற்றை அடையாளத்தின் சமாதானத்திற்குள் வரவேண்டும். அப்படியெனில் அதற்கொரு பொது எதிரி வேண்டும். அந்த பொது எதிரியே சிறுபான்மையினர். அவர்களை கருவறுக்க வேண்டுமெனில் இந்துக்கள் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். புத்தெழுச்சி இந்துயிஸம் இதை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. பாரத மாதா, தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய ராணுவம், புனிதப் பசு போன்ற வார்த்தைகள் இதற்கு பெரிதும் உதவுகின்றன. இந்துவெறியால் உருவாக்கப்படும் நவீன இந்திய தேசியத்திற்கு, மதச்சார்பற்ற இந்நாட்டை ஏகபோகமாக இந்துக்கள் நாடாக மாற்றுவது ஒன்றே லட்சியம்.

அதன் தொடர்ச்சியாகவே இங்கு எல்லா சமத்துவ தளங்களும் மதச்சார்புநிலையை நிறுவுகின்றன. திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயமாக்குகிறது நீதிமன்றம். சட்டப் புத்தகத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்குவதை நீதிமன்றங்கள் முற்றிலுமாக நிறுத்திவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆதாரம் மற்றும் சாட்சிகளை விடவும் மதம் சொல்லும்நியாயதர்மங்களின்அடிப்படையில் நீதிபதிகள் பேசத் தொடங்கிவிட்டனர். மத அடிப்படைவாதத்தை நம்பும் மக்களும் அரசும் அதைதெய்வவாக்காக ஏற்றுக்கொள்கின்றனர். அனைத்து வகையான நவீன ஊடகங்கள் வழியாகவும் சாதி/மதக் கருத்தியல்கள் பரப்பப்படுகின்றன. ஐயர் மேட்ரிமோனி, கவுண்டர் மேட்ரிமோனி என விளம்பரங்களில் சாதியை கூவி விற்கின்றன.. கும்பாபிஷேகம், ஜோதிட பலன்கள், சொற்பொழிவுகள் என சேனல்கள் மதஉணர்வை பரப்புவதற்கான முக்கிய வழியாகிவிட்டன. அதை தவிர்த்து அர்னாப் கோஸ்வாமிகள் தொண்டை கிழியக் கத்திக் கத்தியே இந்து தேசியத்தை வளர்த்தெடுப்பதில் வெற்றி பெறுகின்றனர். இத்தேசத்தின் சமூக/அரசியல்/பண்பாட்டு மேடைகளில் ஓங்கி ஒலிக்கும் இந்து ஆதிக்கவாதிகளின் குரல்கள் கட்டளையாக, எச்சரிக்கையாக, தீர்ப்பாக நம்மை நோக்கி பாய்ந்து வருகின்றன.. அவர்கள் முஸ்லிம்களை அழிந்து போக ஆணையிடுகின்றனர், தலித்களை சேரிகளுக்குள் ஒடுங்கியிருக்க உத்தரவிடுகின்றனர், பெண்களை அடுக்களையிலும் படுக்கையறையிலும் முடங்கிப் போக கட்டளையிடுகின்றனர். பிள்ளை பெற்றால் போதும் என்ற பெண்ணடிமைத்தனம், பண்பாடாக மீட்டுருவாக்கம் செய்யப்படும் நாள் நெருங்குகிறது. மாட்டிறைச்சி உண்பதை குற்றமெனக் கருதும் இந்நாட்டின் பிரதமர் தான் தினமும் 14 கிளாஸ் கோமயம் அருந்துவதாகச் சொல்லி அதையே இந்தியர்களுக்கு பரிந்துரைக்கிறார். (இச்செய்தி ஹிந்துஸ்தான் டைமிஸ் டிசம்பர் 13 அன்று வெளிவந்து பின்னர் நீக்கப்பட்டது). படித்த இந்தியா இந்த சர்வாதிகார, பிற்போக்குத்தனங்களைத்தான் பண்பாடெனக் கொண்டாடுகிறது.

மக்களுக்குள் ஒற்றுமையை சிதைக்கும் சாதியும் இந்துமதமும் இந்திய வாழ்க்கைமுறை என நம்பவைக்கப்பட்டு அதை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இதில் பார்ப்பனர்களையும் முன்னேறிய சாதியினரையும் தவிர எல்லோருமே பலியாட்களே! தலித்கள், ஆதிவாசிகள்,பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் என பெரும்பான்மையான இவ்வளவு பேரும் ஒரு சிறியக் குழுவின் ஆதிக்கத்திற்காக இரண்டாயிரம் ஆண்டுகளாக பலியாட்களாக வைக்கப்பட்டுள்ளனர். அந்த பாரம்பரிய வன்மமே இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.

’ஏட்டுக் கல்வி என்பது வேறு, நமது நம்பிக்கைகள் / குடும்ப வழக்கங்கள்/சாதிய வழக்கங்கள் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது’ என குழந்தைப் பருவத்திலேயே கற்பிக்கப்படுகிறது.’படிச்சிட்டா, வழக்கம்மாறிடுமா’என்ற கேள்வியோடு சிந்திக்கும் திறன் முடக்கப்படுகிறது. இலக்கியத்தையும் தத்துவங்களையும் கரைத்துக் குடித்து உலக அறிவைப் பெற்றாலும் அற விழுமியங்களை இச்சமூகம்புறந்தள்ளமுளையில்விதைக்கப்படும் மதவாத நச்சுத்தான் காரணம். ஒற்றுமை உணர்வோ, குடிமக்கள் என்ற ஒருங்கிணைவோ இல்லாததால் சகமனிதருக்கு நேரும் எல்லா அநீதியும் நீதியாகிறது.

சாப்ட்வேர் எஞ்சினியர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், எம்.பி.ஏ பட்டதாரிகளும் எத்தகைய குற்றங்களுக்கும் பரிகாரங்கள் செய்து அந்த பாவத்திலிருந்து விடுபட முடியும் என நம்புகின்றனர். இந்துமதம் அதற்கான கள்ள வழிகள் வைத்திருப்பதால் இந்துக்களுக்கு குற்றவுணர்வே வருவதில்லை. இந்நாட்டின் வறுமையை, தீண்டாமையை, வன்கொடுமைகளை, வன்முறைகளை எல்லாம் பூர்வஜென்மப் பலன் என்ற ஒற்றை நியாயத்தோடு ஏற்றுக் கொள்ள அப்பன் பாட்டன்களைப் போலவே இவர்களும் பழகியுள்ளனர். சகமனிதரின்அழிவும் துயருமே தனது இருத்தலின் அடையாளம் என நம்பும் கூட்டம் அது. அம்பேத்கர் இதைத்தான் “இந்துக்களின் மனநோய்” என்கிறார்.

கல்வி பெறும் சமூகம் பண்பட வேண்டும். ஆனால் அரசுக்கு பதிலாக கடவுளையும், நாடாளுமன்றத்திற்கு பதிலாக கோவில்களையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு பதிலாக சனாதன விதிகளையும் நீதிமன்றங்களுக்கு பதிலாக சாதி பஞ்சாயத்துகளையும் விரும்பி, கல்வியை வெறும் பொருளீட்டுவதற்கான வழியாக மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் படித்த இந்தியர்கள் இந்நாட்டின் ஜனநாயகக் கொள்கைக்கு புதிய விரோதிகளாக உருவெடுத்துள்ளனர். 25-30 ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயமாக நிலைமை இப்படி இல்லை. சமூக அளவில் இல்லையென்றாலும் மையநீரோட்ட அரசியல் தளத்தில்மதச்சார்பின்மை கடைபிடிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படியேனும் சாதி எதிர்க்கப்பட்டது. ’சமூக அளவில் ஜனநாயகம் மலர்விக்கப்படவில்லை எனில் அரசியல் ஜனநாயகம் அர்த்தமற்றதாகி அழிந்து போகும்’ என்ற அம்பேத்கர் எச்சரித்தார். மூர்க்கமாய்பரவும்இந்துமத நோயால்அரசியல் ஜனநாயத்திற்கும் ஆபத்து நேரும் அவலம் உருவாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் இருந்து சோஷியலிஸ்ட் என்ற வார்த்தையை நீக்கும் சூழ்ச்சிகள் நடந்தேறின. இந்தியாவை ஏகபோக இந்துநாடாக ஆக்கும் வெறி அதில் தென்பட்டது. காந்தி கொலைக்குப் பின்னர் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததுதான் சுதந்திர இந்தியாவின் பெரும் தோல்வி. சமூக அளவில் நடந்தேறும் எல்லா சனாதன அட்டூழியங்களுக்கும் அரசியல் ரீதியான அனுமதி அளிக்கப்படும் ஆபத்து நம்மை குறிபார்க்கிறது.

ஒரு மதச்சார்பற்ற நாட்டிற்குரிய பண்பாக எல்லாம தங்களுக்கும் அதனதன் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சட்டங்கள் வகுக்கப்பட்டாலும் எல்லாவற்றையும் அடிப்படை உரிமைகள் எனும் கடிவாளத்தோடு இணைத்து சாதி/ மதரீதியான பாகுபாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அரசியலமைப்பு விதிகளை மதவிதிகள் விஞ் சக்கூடாது என்பதில் அம்பேத்கர் கவனமாக இருந்தார். இந்நாட்டின் ஒடுக்கப்பட்டோரையும் சிறுபான்மையினரையும் இன்றளவில் காத்துக் கொண்டிருப்பது அது மட்டுமே.

மற்றபடி பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பிறகுஇந்துமதஎதிர்ப்பையும் சாதிஒழிப்பையும் உயிர்க் கொள்கையாகக் கொண்டு களத்தில் செயல்பட ஆளில்லை. நமது புரட்சி முழக்கங்கள் அன்று மேடையோடு முடிந்தது; இப்போது டி.வி விவாதங்களிலும் முகநூலிலும் முடிகிறது. பகுத்தறிவாளர்களின் செயலற்ற நிலையே மதவாதிகளையும் சாதியவாதிகளையும் சுதந்திரமாக செயல்பட வைக்கிறது. இந்துமத வஞ்சகங்கள் குறித்தும் மாண்புரிமைகள் குறித்தும் சாதியழிப்பு பேரிலக்கியத்தை அறிவாயுதமாக அம்பேத்கரும் பெரியாரும் இச்சமூகத்திற்கு நல்கிப் போனார்கள். ஆனால் அந்த ஆயுதத்தை இச்சமூகம் எவ்வளவு செறிவாக பயன்படுத்தியதுஎன்பதற்கு பெருகிநிற்கும்இந்த கால் நூற்றாண்டுகால அவலங்களே சாட்சி!  

அம்பேத்கரை தலித் போராளியாகவும் பெரியாரை கடவுள் மறுப்பாளராக/ பெண்ணுரிமை போராளியாக சுருக்கி எரிமலைகளை சிறுபுற்களாக்க தோழமை சக்திகளே முயல்கின்றன. மானுட விடுதலைத் தத்துவங்களான பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் அவரவர் வசதிக்கேற்க தமிழ் தேசியமாகவோ மதச் சீர்திருத்தமாகவோ சிறுமைப்படுத்தும் கொடுமையை பலர் நிகழ்த்து கின்றனர். பெரியாரை ஒழித்துக் கட்டவும் அம்பேத்கரை இந்துமத சீர்திருத்தவாக்கியாக்கவும் இந்துத்துவவாதிகள் பல நிலைகளிலும் முயல்கின்றனர். இந்துமதத்தை வேரறுக்கும் சாதி ஒழிப்பே அம்பேத்கரிய-பெரியாரிய தத்துவங்களின் உயிர் நாடி என்பதையும் அம்பேத்கரின் பவுத்தப் புரட்சிக்கும் பெரியாரின் பகுத்தறிவுப் பரவலாக்கத்திற்கும் இந்துமத ஒழிப்பைத் தவிர வேறு நோக்கமில்லை என்பதையும் பகுத்தறிவுச் சமூகம் உரக்க முழங்க வேண்டும்.

ஆறாயிரம் சாதிகளால்பிளவுண்டு கிடக்கும் இச்சமூகத்தில் சாதி ஒழிப்பே சமூகப் புரட்சியாக இருக்க முடியும் என்ற நிலையில் நமது மாற்று அரசியல் களங்கள் எல்லாம் இந்துமதம் குறித்தும் சாதியம் பற்றியும் சுரணையின்றி ஏதேதோபுரட்சிகளுக்குமுயன்றுகொண்டிருக்க, பொதுச் சமூகத்தை மூளைச்சலவை செய்து கையகப்படுத்தும் வேலையில் என்றென்றைக்கு மாக இந்துத்துவவாதிகளும் பார்ப்பனர்களும் வாகை சூடியுள்ளனர். அரசியல் அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆய்வாளர்கள் என எல்லோருமே ‘இந்துமதம் மற்றும் சாதியம்’ குறித்த அம்பேத்கர் மற்றும் பெரியாரின் ஆய்வுண்மைகளை புறந்தள்ளியபடியே இங்குள்ள சமூகப் பிரச்னைகளுக்கு ஏதேதோ தீர்வுகளை முன்மொழிகின்றனர். ஆனால் நேர்மையான, உண்மையான தீர்வை அம்பேத்கரியமும் பெரியாரியமுமே கொண்டிருக்கிறது.

அந்த தத்துவங்களே இந்நாடு இந்துமயமாவதை தடுக்கவல்லவை. அந்ததத்துவங்களே இந்நாட்டை பண்படுத்த வல்லவை. அந்த தத்துவங்களே பகுத்தறிவுச் சமூகத்திற்கு வலிமையைத் தர வல்லவை. மதச்சார்பின்மைக்கான நாகரிக இடத்தைக் கொண்டிருந்த பொதுத் தளங்கள் எல்லாம் இந்துமயப்படுத்தப்படுமெனில் இந்நாட்டில் சிறுபான்மையினரும் தலித்களும் வாழ முடியுமா? இந்துமத இழிவிலிருந்துதம்மை விடுவித்துக் கொண்டு கிறித்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் சுயமரியாதையோடு வாழ்வோரை தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற பெயரில் இழிவுக்குள் இழுத்துப் போடும் கொடுமைக்கு யார் முடிவு கட்டுவது? இந்துமதத்தை சீர்திருத்த முடியாது.

அதிலிருந்து வெளியேறுவது ஒன்றே சாதி இழிவிலிருந்து விடுபட்டு மாண்புமிக்க வாழ்க்கை வாழ்வதற்கான ஒரே வழி என்று சொல்லி பவுத்தம் தழுவினார் அம்பேத்கர். அப்புரட்சிக்காகவே அம்பேத்கரை தன் தலைவராக ஏற்றுக் கொண்டார் பெரியார். இந்துமதத்தை ஒழிப்பதற்கான பாதை நம் முன்னே தெள்ளத் தெளிவாக இருந்தும் பகுத்தறிவுச் சமூகம் அதை தேர்ந்தெடுக்க மறுத்தபடி இருக்கிறது.

2025 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு. அதற்குள் செய்து முடிக்க அவர்களுக்கு ஆயிரம் செயல்திட்டங்கள் இருக்கலாம். சமூக,அரசியல் பொருளாதாரத் தளங்களில் உருவாக்கப்படும் ஒவ்வொரு சலசலப்பும் இந்துமயமாக்கலை நோக்கிய நகர்தலே என்பதில் சிறிதளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. பகுத்தறிவுச் சமூகம் இதை எதிர்கொள்ள எவ்வகையில் தயாராக இருக்கிறதுஎன்பதுதான் மிகப்பெரியக்கேள்வி. நிறுத்திவிட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்தை, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை, பார்ப்பனிய எதிர்ப்பை களத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பணிகளை அது துரிதப்படுத்தியாக வேண்டும். இந்து நாடாக இந்தியா மாறுவதென்பது ஒடுக்கப்பட்டோரும் சிறுபான்மையினரும் அழிவதற்கான அறைகூவல். அதை பகுத்தறிவுச் சமூகம் வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?

‘‘சாதி ஒழிப்பே சமூக விடுதலைக்கு வழி வகுக்கும். சாதி ஒழிய வேண்டுமெனில் இந்துமதத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்மை துண்டித்துக் கொள்ள வேண்டும்” -நம் வழிகாட்டிகளிடம் நாம் கற்ற பழைய முழக்கம்தான். ஆனால் அதை நாம் மீண்டும் மீண்டும் உரக்கக் கூற வேண்டியிருக்கிறது. இச்சமூகத்தை இந்துமயப்படுத்த முயலும் அடிப்படைவாதிகளின் அடிவயிறு கலங்குகிற வகையில் மீண்டும் மீண்டும் முழங்க வேண்டி யிருக்கிறது. அவ்வாறே சமத்துவத்திற்கும் மனித மாண்பிற்குமான அறப்போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது.

Pin It

இதழியல்வழி உருவாவதே குட்டிக்கதை எனும் வடிவம். பக்க வரையறைகள் இதழியலில் பல வடிவங்களை உருவாக்கியுள்ளது என்று கூற முடியும். சிறுகதையும்கூட அவ்வாறு உருவானதுதான். கல்கி இதழில் விந்தன் எழுதிய குட்டிக்கதைகள் நகைச்சுவை உணர்வு, எள்ளல் பாணி ஆகியவற்றைக் கொண்டவை. மரபான விழுமியங்களை நக்கல் செய்து, புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்கு சொல்வதில் விந்தன் தனித்தவராக அமைகிறார்.

vindhanஇருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த அ.மாதவையா(1872-1925), வ.ரா. (18891951), புதுமைப்பித்தன் (1906-1948) ஆகியோர் கரடுதட்டிப்போன சமூகக் கொடுமைகளைத் தம் எழுத்துக்களில், தோலுரித்தவர்களில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியவர்கள். சாதியக் கொடுமை, பெண்ணடிமை போன்றவற்றைத் தமது ஆக்கங்களில் பதிவு செய்தவர்கள். இந்த காலங்களில் சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள் குறித்து தம் ஆக்கங்களில் பதிவு செய்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மூடநம்பிக்கைக்கு எதிரான பல படைப்பாளிகள் தமிழில் உருவாகிவிட்டனர். அவர்களில் தற் போது நூற் றாண் டு நிறைவெய்தியிருக்கும் கோவிந்தன் எனும் விந்தன் (1916-1975) குறிப்பிடத்தக்கவர். அவரது நூற்றாண்டுநிறைவையட்டி,மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது ஆக்கங்களை நினைவுபடுத்திக் கொள்வதாக இப்பதிவு அமைகிறது.

விந்தனின் தனித் தன்மைகளாகப் பலவற்றைப் பதிவு செய்ய முடியும். அவரது ஆக்கங்களில் அவை எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதைச் சுருக்கமாகக் கீழ்க்காணும் முறையில் தொகுக்கலாம்.

-1930களில்தான் தமிழ்ச் சிறுகதை வடிவம் என்பது தமிழில் நிலைபேறு கொண்ட காலம். இக்காலங்களில் புதுமைப்பித்தன் முன்னத்தி ஏர். ஆனால் விந்தன், தமிழ்ச்சிறுகதை மரபில் உதிரிப்பாட்டாளி மக்களைப் பதிவு செய்த முதல் மனிதர் என்று கூறமுடியும். சென்னை நகர உருவாக்கமும் அத்தன்மை சார்ந்து உருவான பாட்டாளிகளைக் கதை மாந்தர்களாக விந்தன் உருவாக்கினார். இந்த வகையில் ஜெய காந்தனுக்கு முன்னோடியாக விந்தனைக் கூற முடியும்.

-இதழியல்வழிஉருவாவதே குட்டிக்கதை எனும் வடிவம். பக்கவரையறைகள் இதழியலில் பல வடிவங்களை உருவாக்கியுள்ளது என்று கூற முடியும். சிறுகதையும்கூட அவ்வாறு உருவானதுதான். கல்கி இதழில் விந்தன் எழுதிய குட்டிக்கதைகள் நகைச்சுவை உணர்வு, எள்ளல் பாணி ஆகியவற்றைக் கொண்டவை. மரபான விழுமியங்களை நக்கல் செய்து, புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்கு சொல்வதில் விந்தன் தனித்தவராக அமைகிறார்.

-விந்தன் நாவல்களும் இதழியல் சார்ந்த தொடர்கதை மரபில் உருவானவைதான். அவற்றில் பெண் குறித்த பதிவுகளே முதன்மையாக அமைகின்றன. இந்த வகையில் இவருக்கு முன்னோடியாக வ.ரா. வைக் கூறலாம். பெண்களுக்குச் சமூகம் இழைக்கும் கொடுமைகளே இவரது நாவல்கள்.

1960 களில் ‘தினமணிக்கதிர்’ போன்ற பத்திரிக்கைகளில் உருவகக் கதைகளை விந்தன் எழுதினார். “ஓ மனிதா!” என்று அவை தொகுக்கப்பட்டுள்ளன. இயற்கையில் உள்ளபிற உயிரினங்களைவிட மனிதன் எவ்வாறு மோச மானவனாக இருக்கிறான் என்பதை உருவகம் செய்துஎழுதியுள்ளார். மனிதசமூகம் நிகழ்த்தும் கொடுமைகள் மீதான கடும் விமர்சனமாக (ளுயவசைந) அவை அமைந்துள்ளன.

1950களில் இஸ்மத்பாஷா நடத்திய ‘சமரன்’ இதழும் விந்தன் நடத்திய ‘மனிதன்’ இதழும் குறிப்பிடத்தக்கவை. கம்யூனிஸ்ட்க் கட்சியிலிருந்து வெளியேறி இஸ்மத்பாஷா நடத்தியது சமரன், கம்யூனிஸ்ட் கட்சி தொடர் பில்லாமல் விந்தன் நடத்தியது மனிதன்.இவ்விரு இதழ்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து நடத்திய இதழ்கள் அளவிற்கு இடதுசாரி சிந்தனை மரபை முன்னெடுத்தவை. குறிப்பாக, தி.மு.க. வின் வெகுசன அரசியலைக் கடுமையாக விமர்சனம் செய்தவை. மாக்சிம் கார்க்கியின் தாக்கத்தால் தமது பத்திரிக்கைக்கு ‘மனிதன்’ என்று பெயரிட்டதாக விந்தன் கூறுகிறார். இந்த வகையில் இதழியல் துறையிலும் விந்தன் தனித்தன்மையுடன் செயல்பட்டிருக்கிறார்.

‘அன்பு’ என்ற திரைப்படத்தில் விந்தன் எழுதியபாட்டு இவ்வாறுஅமைகிறது. “விதியை நம்பி எத்தனை நாள் வீணாக்கழிப்பது?ஃ வீணர் வாழ எத்தனை நாள் வீரம்குன்றி வாழ்வது?ஃ பாடுபடும் பாட்டாளி பசியாலே துடிக்கிறான்ஃ பசியைப் பணமாக்கி முதலாளி பதுக்குகிறான்ஃ சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குதுஃ ஆலையிலே அவனாவி புகையாகப் போகுதுஃ” எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளிக்குப் பாடல் மற்றும் கதை வசனம் எழுதியவர் விந்தன். சினிமாத்துறையில் செயல்பட முயன்று தோல்வியடைந்தவர் விந்தன்.

மேற்குறித்தவாறு பல்துறைப் புலமையாளராக வாழ்ந்த விந்தன் 1940-1970 காலங்களில் தமிழ்ச் சூழலின் தனித்த ஆளுமையாகவே இருந்தார். இவரது ஆக்கங்களில் இரண்டை மிக முக்கியமானவையாகநான்கருதுகிறேன்.அவை பின்வருமாறு.

-1973 இல் அவர் எழுதிய “பெரியார் அறிவுச் சுவடி” எனும் சிறு நூல். அவரது மறைவுக்குப் பின்புதான் அச்சுவடிவம் பெற்றது.

அவரது கையெழுத்து வடிவில் 1978 இல் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

1956இல் விந்தன் எழுதிய‘பசிகோவிந்தம்’ எனும் நூல்.

இவ்விரு ஆக்கங்கள் தொடர்பான விரிவான உரையாடலை முன்னெடுப்பது அவசியம். அவரது நூற்றாண்டு விழா தொடர்பாக நடந்த பல கருத்தரங்குகளில் அவரது புனைகதை உலகம், இதழியல் உலகம், சினிமா உலகம் ஆகியவை பற்றி விரிவாகப் பேசப்பட்டது. ஆனால், பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்க மரபு சார்ந்து அவர் எழுதிய மேலே குறித்த இரு ஆக்கங்கள் பற்றிய உரையாடல்கள் விரிவாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூற முடியாது. சுயமரியாதை இயக்க மரபு மற்றும் இடதுசாரிகருத்துநிலைசார்ந்தவர்கள்பெரிதும் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டிய இவ்விரு ஆக்கங்கள் தொடர்பான உரையாடலை முன்னெடுப்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் முப்பதாம் நாள் விந்தன் மாரடைப்பால் முடிவெய்தினார். தந்தை பெரியார் டிசம்பர் 24 ஆம் நாள் 1973 இல் முடிவெய்தினார். விந்தன் ‘பெரியார் அறிவுச்சுவடி’ எனும் குறுநூலை 1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதி முடித்திருக்கிறார். பெரியார்மறைவதற்குசுமார்ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது இப்பிரதி. அப்பிரதியில் காணப்படும் சில வரிகளை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.

‘ஆத்திசூடி’ எனும் இலக்கிய வடிவம் ஆத்திமலரைச் சூடி, சிவனை வழிபடுவது என்னும் மரபில் தமிழில் உருவானது. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் சைவ கருத்தியல் பரப்புரை வடிவில் உருவாக்கப்பட்ட கிழவி உருவக மரபுதான் ஓளவைப்பாட்டி. சங்க கால ஓளவைக்கும் இந்தக் கிழவி உருவக ஓளவைக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தமிழ் இலக்கிய மரபில் சுமார் ஐந்து ஓளவைகள் காலந்தோறும் கட்டமைக்கப்பட்டுள்ளனர். இதில் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் கட்டப்பட்ட ஓளவை உருவம் தான் ‘ஆத்திசூடி, உலகநீதி, ஆகிய நூல்களை உருவாக்கியதாக மரபு. இவை அப்பட்டமான பெண்ணடிமை பேசும் சமய நூல்கள். சைவம் சார்ந்த நூல்கள். இவ்வகை ஆத்திசூடிமரபில் எழுதுவது என்பது தமிழ்ப் புலவர்கள் மரபுகளில் ஒன்று. தமிழில் அவ்வகையில் சுமார் 50 ஆத்திசூடிகள் தேறும்’. இவை குழந்தைகளுக்கு அகர வரிசைகளைப் பாடம் சொல்வதற்காக எழுதப்பட்டவை. திண்ணைப்பள்ளி பாடநூல்களில் ஆத்திசூடி முதன்மையானது. மேற்குறித்த ‘ஆத்திசூடி’, ‘உலகநீதி’, வடிவில் விந்தன் எழுதிய சுயமரியாதைக் கருத்துப் பரப்புரை வரிகள் முக்கியமானவை. அவை

“ஆலயம் தொழுவது சாலவும் தீது” இவ்வரிகள் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ எனும் மூல ஆத்திசூடியை மறுதலித்தது. இவ்வகையில் பின்வரும் பலவற்றையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

‘ஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே’

‘கடவுள் என்பது கயவர்கள் கற்பனை’

‘கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்’

‘கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை’

‘கோயில் இல்லா ஊரில் நீ குடி இரு’

‘சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை’

‘செத்ததும்விடுவான்மருத்துவன்;செத்தாலும் விடான் புரோகிதன்’

‘திராவிடர்க்கில்லை திதியும் திவசமும்’

‘தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே’

‘நெற்றியில் வேண்டாம் நீறும் நாமமும்’

‘பாம்புக்கு நஞ்சு பல்லில்; பார்ப்பனுக்கு நஞ்சு நெஞ்சில்

‘பீடை என்பது பிராமணீயமே’

 ‘மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை’

விந்தன் எழுதியுள்ள 85 அறிவுச்சுவடி பாடல்களில் மேலே சிலவற்றை மட்டும் மாதிரியாகக் கொடுத்துள்ளேன். அந்த வடிவத்திற்கு ‘பெரியார் அறிவுச்சுவடி’ என்று அவர் பெயர் கொடுத்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். பெரியாரின் இறுதிக் காலத்தில், விந்தன் தமது இறுதிக் காலத்தில் செய்த பதிவு என்பது, வாழ்நாள் முழுதும்பெரியார்குறித்துவிந்தன்கொண்டிருந்த மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெரியார் பேசிய கருத்துக்களின் சாரமாக அமையும் இவரது இந்த நூல், சிறு வடிவில், சட்டைப் பையில் வைத்திருக்கும் அளவில் அச்சிட்டுப் பரப்பும் தேவை நமக்குண்டு. பெரியார் சிந்தனைகளை இவ்வகையான வடிவத்தில் எழுதியவர்களாக இன்னொருவரைக் கூற முடியுமா? என்பது அய்யமே. விந்தன் ‘கல்கி’, ‘தினமணிக்கதிர்’, ‘அமுதசுரபி’ ஆகியபிற பார்ப்பனப் பத்திரிக்கைகளில் வேலை பார்த்தவர் என்றாலும் பெரியார் குறித்த இவ்வகையான மனப்பதிவு,1930-1975 காலங்களில் தமிழ்ச்சூழல் நிகழ்வுகளை அறிந்தவராக அவர் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அச்சூழலில் பெரியாரை மட்டுமே அவர் மதித்து உள்வாங்கியதையும் அறிகிறோம். விந்தன் திராவிடக் கழகச் செயல்பாடுகள் எதிலும் பங்குகொண்டவர்இல்லைஎன்பதையும்இங்கு பதிவு செய்ய வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் எதார்த்த நிகழ்வுகளை உள்வாங்கிய எழுத்தாளன் பெரியார் பக்கம்தான்நிற்க வேண்டும் என்னும் உந்துதல் உருவாகியிருப்பதை அறியமுடிகிறது.

vindhan book‘ஆத்திசூடி’ வடிவம் அகர வரிசையில் அமைவது. ‘உலகநீதி’, ஆகிய பிற நூல்கள் ஒலி வடிவில் அமைவன. பக்திப்பாடல்களில் உள்ள பஜனைமரபு போன்றுஒலிஏற்ற இறக்கத்தோடு பாடுபவைஉலகநீதிபோன்றநூல்கள்.இம்மரபை உள்வாங்கி ‘சமூகநீதி’ எனும் தலைப்பில் விந்தன் எழுதியுள்ள பாடல்கள், பெரியாரின் கருத்து மரபை எளிய சொற்களால் வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. இவ்வடிவத்தில் விந்தன் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

1.“சாதியென்றும் சமயமென்றும் சொல்ல வேண்டாம்.

சாத்திரத்தை ஒரு நாளும் நம்ப வேண்டாம்.

விதியென்றும் வினையென்றும் சொல்ல வேண்டாம்.

வீணாகக் காலத்தைக் கழிக்க வேண்டாம்.

நாளென்றும் கோளென்றும் சொல்லவேண்டாம்.

நல்வாய்ப்பை அதனாலே இழக்க வேண்டாம்.

தமிழினத்தின் தன்மானம் காக்க வந்தோன்

தலைவனாம் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே”

2. “மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்

மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம் சிந்திக் கும் முன் எதையும் செய்ய வேண்டாம்

செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்

பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்                                            

படித்துவிட்டுப் பகுத்தறிவை இழக்க வேண்டாம்                                        

‘எம்மதமும் சம்மதமே’ என்ற மேலோன் ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே” உலகநீதி நூலில் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று தொடங்கி ‘மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே’என்று முடியும் அந்த மரபையும் ஒலி ஒழுங்கையும் நேர்த்தியாக உள்வாங்கி, மேல் குறித்த ‘சமூகநீதி’யை விந்தன் எழுதியுள்ளார். ஆத்திசூடி மரபை உள்வாங்கியதைப் போல ‘உலகநீதியையும் உள்வாங்கி முறையே ‘அறிவுச்சுவடி’, ‘சமூகநீதி’ ஆகியபாடல்களை விந்தன் உருவாக்கியுள்ளார். இப்பாடல்களைக் குழந்தைகளிடத்தில் பரவச் செய்யும் கடமை நமக்கிருக்கிறது. விந்தன் தமது இறுதிக் காலத்தில் ‘பெரியார் அறிவுச் சுவடி’, ‘சமூகநீதி’ ஆகிய ஆக்கங்களை உருவாக்கியதற்கு ஏதேனும் அவரது முற் காலப் படைப்புகளில் ஏதுக்கள் உண்டா? என்று தேடினால் 1956 இல் அவர் எழுதிய ‘பசி கோவிந்தம்’ கிடைக்கிறது. இந்த நூல், தமிழ் இலக்கண மரபில் புடைநூலாகும். புடைநூல் என்பது இதற்குமுன்பு எழுதிய நூல் ஒன்றின் வடிவிலேயே, அந்நூல் கருத்தை ஏற்றோ மறுத்தோ எழுதும் நூல் என்று புரிந்துகொள்ளலாம். சங்கராச்சாரி ‘மோகமுத்கரம்’ எனும் நூலொன்றை எழுதியுள்ளார்; மோகத்தை உடைக்கும் சம்மட்டி என்று அதற்குப் பொருள். இந்த நூலைத் தழுவி ‘பஜகோவிந்தம்’ எனும் பெயரில் சமஸ்கிருதத்தில் பலர் எழுதியுள்ளனர்.  

தமிழில் இந்நூலைத் தழுவி ‘பஜகோவிந்தம்’ என்னும் நூலை இராஜகோபாலாச்சாரி எழுதி யுள்ளார். இந்த நூலுக்குப் புடைநூலாகவே விந்தன் ‘பசிகோவிந்தம்’ என்னும் நூலை உருவாக்கியுள்ளார்.

“அறிவு நன்றாக முற்றி இதயத்தில் பதிந்தால் அது ஞானமாகும். அந்த ஞானமானது வாழ்க்கையுடன் கலந்து ஒன்றாகச் சென்று செயலுருவமடைந்தால் அதுவே பக்தியாகும். முற்றிய அறிவு பக்தி என்று சொல்லப்படும்”, என்பது இராஜகோபாலாச்சாரியார் பதிவு. இதனையே விந்தன் தமது நூலில் “பசிவேறுபக்தி வேறு என்று பக்குமடையாத சிலர் பேசுவதுண்டு. எடுத்த விஷயத்தைக் குழப்பி, ஏமாந்தவரை லாபம் என்று கருதுவோர்க்கப்படிப்பட்ட சொற்றொடர்களை ஆங்காங்கே பிரயோகப் படுத்துகிறார்கள். அவற்றைப் பார்த்து நீங்கள் மயங்கிவிடக் கூடாது. எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும். தவறான பொருளை எடுத்துக் கொண்டு ‘தகிங்கிணதோம்’ போடக் கூடாது. பசியும் பக்தியும் ஒன்றே. இரண்டல்ல. பசி முத்தினால் பக்திக்கு அவசியமில்லை; புலன்கள் அனைத்தும் ஏன் கடைசி மூச்சு உட்பட தாமாகவே அடங்கிவிடும். ‘தத்துவம்;’ இதுவே!”

இராஜாஜி கூறும் பக்தியை விந்தன் பசியாகக் கட்டமைக்கிறார். பசி உள்ளவர்களிடம் பக்தி பேசுவது அப்பட்டமான மோசடி என்பது விந்தன் கருத்து. இந்த வகையில் சங்கராச்சாரியார், இராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் பேசும் பக்தி மரபை எளிய சொற்களால் மறுத்து, அவை மக்களை ஏமாற்றும் தந்திரம் என்பதை ‘பசிகோவிந்தம்’ நூலில் வெளிப்படுத்துகிறார்.

பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே’ என்னும் வரிகளை விந்தன்

பசிகோவிந்தம் பசிகோவிந்தம்

பசிகோவிந்தம் பாடு

பரலோகத்தில் இடம் தேடலாம்

பசிகோவிந்தம் பாடு!

படிக்காதிரு படிக்காதிரு

படிக்காதிரு பயலே!

படித்தால் எமன் வரும்போதுனைப்

பகவான் கைவிடுவார்’

என்று விந்தன் கட்டமைக்கிறார். ‘பஜ கோவிந்தம்’ நூல் முதன்மையாக நிலையாமை குறித்துப் பேசுகிறது. இதனால் ஆசை, மோகம் ஆகிய பிறவற்றை மனிதன் கொள்வது குறித்தும் பேசுகிறது. விந்தன் இவ்வகையான சொல் லாடல்கள் என்பவை பாமர மக்களை ஏமாற்று வதற்காக உருவாக்கப்பட்டவை என்று உறுதியாக நம்புகிறார்.

‘பணமேனடா பணமேனடா

பணமேனடா பயலே?

பணத்தாசை வளர்த்தாலது

பணக்காரர் மேல் பாயும்

படுவாய்தினம் படுவாய்தினம்

படுவாய், பாடுபடுவாய்!

பசித்தாலது பகவான் செயல்

பஜகோவிந்தம் பாடு’

என்று விந்தன் எழுதுகிறார். இராஜாஜி எழுதியுள்ள முப்பத்தோறு பாடல்களுக்கு இணையாக இவரும் முப்பத்தோறு பாடல்களை எழுதியுள்ளார். இராஜாஜி திருக்குறள் வரிகளைப் பயன்படுத்தி விளக்கம் எழுதுவதை மறுத்து விந்தன் விளக்கம் எழுதுகிறார். இவ்வகையில் சமய மரபை மறுதலித்து பகுத்தறிவு மரபை முன்னெடுக்கும் நூலாகப் பசிகோவிந்தம் அமைகிறது.

1956 ஆம் ஆண்டுகளில் விந்தன் எழுதிய ‘பசி கோவிந்தம்’ நூலுக்கு மூலநூலான இராஜாஜியின் நூல் பஜகோவிந்தம், அதே காலச் சூழலில் எழுதப்பட்டது. குலக்கல்விதிட்டத்தை நடைமுறைப்படுத்த சட்ட வரைவுகளை இராஜாஜி இந்தக் காலச் சூழலில் தான் கொண்டுவந்தார். மிகவும் பிற்போக்கான சநாதனியாகச் செயல்பட்ட இராஜாஜியை நேருக்குநேர்மோதியவராகவிந்தன்அமைகிறார். பெரும் அரசியல் செல்வாக்குடைய, இந்திய அளவில் பெரும் தலைவராகவும் இருந்த நபரை சாதாரண எழுத்தாளராக இருந்த விந்தன் எதிர்கொண்ட முறைமை வியப்பளிக்கும் தன்மை கொண்டது. இவ்வகையான மனஉறுதியை சுயமரியாதை இயக்கம் அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்த நூல் அச்சாக்கம், எழுதப்பட்டுள்ள மொழி ஆகிய அனைத்தும் இராஜாஜியை கடுமையாகப் பகடிசெய்யும் வகையில் உள்ளன. விந்தனின் இச்செயல்பாட்டை தமிழ்ச்சமூகம் அறிந்திருப்பதாகவே அறிய முடியவில்லை. அன்றைய சூழலில் தி.மு.க. அமைப்பை விமர்சனம் செய்பவராகவும் விந்தன் இருந்தார்.

இராஜாஜியையும் தி.மு.க. அமைப் பையும் ஒரே நேரத்தில் விமரிசனம் செய்யும் அவரது மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் நடைமுறைச் செயல்பாடுகள் சார்ந்து விந்தன் மேற்கொண்ட அணுகுமுறையை நாம் விதந்து பேச வேண்டும். இவ்விதம் 1950 கள் தொடங்கி, அவரது இறுதிக் காலம் முடிய சுயமரியாதைச் சிந்தனை மரபை உள் வாங்கி வாழ்ந்த மனிதராகவே விந்தன் வாழ்ந்திருக்கிறார். சிறுகதைப் படைப் பாளராகத் தொடக்ககாலத்தில் தம் எழுத்துப்பணியைத் தொடங்கியவர், பிற்காலங்களில் தமிழ்ச் சமூகத்தின் இயங்குதளத்தில் பெரியாரைப் புரிந்து கொண்டவராகவே வாழ்ந்திருக்கிறார்.

சுயமரியாதை இயக்கங்களில் நேரடி பங்கு பெறாமல், அதே நேரத்தில் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகள் மற்றும் தந்தை பெரியார் செயல்பாடுகள் ஆகியவற்றில் பெரும் மதிப்புடையவர்களாக வாழ்ந்த வ.ரா. என்னும் வ.ராமசாமி மற்றும் கோவிந்தன் எனும் விந்தன் ஆகியோரை இன்றைய சுயமரியாதை இயக்கம் கொண்டாடும் தேவையுண்டு.

Pin It

கல்லடி விழும் காய்த்த மரம் என்று நீதிக் கட்சியைச் சொல்லிவிடலாம். எத்தனை யெத்தனை விமரிசனங்கள் அந்தக் கட்சியின் மீது. நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் அதன்மீதான சொல்லடிகள் நின்றபாடில்லை. வேடிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு விமரிசனத்துக்கும் உரிய முறையில் பதில் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

பெண்களுக்கு அதிகாரம் பற்றி இன்றைக்கு அறிவுஜீவிகள் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி மக்கள் என்றால், எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு என்று எந்த வித்தியாசமும் பெண்கள் விஷயத்தில் பார்க்கப் படுவதில்லை.

வெள்ளையனுக்கு வால் பிடித்த கட்சி, சுதந்தரத்துக்கு எதிரான கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பெண்களை இழிவாக நினைக்கும் கட்சி என்பன போன்ற புளித்துப்போன புரட்டுகளுக்குப் பதிலளிப்பதைக் காட்டிலும் நீதிக்கட்சி இங்கே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்துப் பேசுவது சரியாக இருக்கும். குறிப்பாக, இது நீதிக்கட்சியால் அமலுக்கு வந்த திட்டங்களையும் செயல்களையும் அனுபவித்துக்கொண்டே, அந்தக் கட்சியின் மீது தெரிந்தும் தெரியாமலும் விமரிசனம் வைத்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்குச் சில முக்கியமான குறிப்புகளைப் பதிவுசெய்யவேண்டியது அவசியம் மட்டுமல்ல, அத்தியாவசியத் தேவையும்கூட.

பெண்களுக்கு அதிகாரம்(Empowering Women) பற்றி இன்றைக்கு அறிவுஜீவிகள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி மக்கள் என்றால், எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு என்று எந்த வித்தியாசமும் பெண்கள் விஷயத்தில் பார்க்கப் படுவதில்லை. எல்லோருமே அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். அந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு முதலில் வாக்குரிமை என்ற அடிப்படை உரிமையைக் கொடுத்தது நீதிக்கட்சி அரசு. இந்த உத்தரவைப் பின்பற்றித்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் இதர மாகாணங்கள் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தன.

வெறுமனே வாக்குரிமை வழங்கிவிட்டு, அவர்களைப் பார்வையாளராக மட்டுமே வைத்திராமல், பெண்களைச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கவும் நியமனம் செய்யவும் சட்டரீதியிலான உரிமை வழங்கியதும் நீதிக்கட்சிதான். இன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக ஒரு பெண்மணி இருக்கிறார். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தது நீதிக்கட்சி. சட்டமன்றத்தை வழிநடத்தும் பொறுப்பை டாக்டர் முத்துலட்சுமிக்கு வழங்கியது நீதிக்கட்சி. பெண்களுக்கான அதிகாரம் என்பதெல்லாம் இப்படியான முற்போக்கான நகர்வுகளின் வழியாகவே சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நெருக்கடிகள் இன்று இந்தியா முழுக்க இருக்கின்றன. ஒருபக்கம் அம்பேத்கரைச் செரித்துக்கொள்ளும் முயற்சிக ள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான எதிர்வினையை ஆற்றவேண்டியவர்களோ, தாழ்த்தப்பட்ட மக்களின் நேச சக்தியாக எப்போதும் விளங்கிவரும் நீதிக்கட்சி உள்ளிட்ட திராவிட இயக்கத்தையே தங்களுக்கான எதிரி சக்தியாகப் பார்த்து, அவற்றின் மீதேவிமரிசனம் வைத்து, மெய்யான எதிரிகளை வேண்டுமென்றே விட்டுவைக்கும் காரியத்தைச் செய்கின்றன.

இப்படிச் செய்பவர்கள் நீதிக்கட்சி தாழ்த்தப் பட்ட மக்களுக்காக ஆற்றிய பங்களிப்புகளை அறியாதவர்கள் அல்லர். ஏனையோரைவிட அதிகம்அறிந்தவர்கள்.ஆனாலும்அவர்களுடைய உள்ளக்கிடக்கை வேறாக இருப்பதால் அவர்கள் பல விஷயங்களை மூடி மறைக்கின்றனர். என்றாலும், அவர்களைப் பின்பற்றுவோர் புரிந்துகொள்ள சில செய்திகளைப் பதிவுசெய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.

பள்ளர், பறையர், பஞ்சமர் என்ற பெயர்களைக் கொண்டு தாங்கள் அழைக்கப்படுவதை அவமானமாகக் கருதிய தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வை முதலில் புரிந்துகொண்ட கட்சி நீதிக்கட்சி. அதனால்தான் அந்தப்பெயர்களைஎல்லாம்முற்றாகநீக்கிவிட்டு, ஆதிதிராவிடர் என்ற ஒற்றைப் பெயரில் அழைப்பதற்கு ஆணையிட்டது நீதிக்கட்சி அரசு. பஞ்சமர்கள் சாலையில் நடக்கக்கூடாது என்றிருந்த நிலையை அரசாணை வழியே அகற்றியது, பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் அதை சட்டபூர்வமாக அடித்து நொறுக்கியது என்று நீதிக்கட்சியின் சுயமரியாதை சார்ந்த உத்தரவுகள் முக்கியமானவை. சுயமரியாதை என்பதைத் தாண்டி அவர்களுக்கான சமூகநீதியைப் பெற்றுத் தருவதிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறது நீதிக்கட்சி. பொதுத்துறையில் இட ஒதுக்கீடு உருவாக்கிக் கொடுத்தது நீதிக்கட்சி அரசு. இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் சமூகநீதி நடவடிக்கைகள்அனைத்துக்கும்ஆரம்பப்புள்ளி நீதிக்கட்சிதான்.

கல்விக்கண் திறந்தவர் காமராஜர். அவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம்தான் ஏழை மாணவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு வரவழைத்தது என்கிறார்கள். உண்மைதான். தமிழகத்தின் கல்விகற்றோர் சதவிகிதம் கணிசமான உயர்ந்ததற்குக் காமராஜரின் மதிய உணவு, எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் போன்றவை காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பதில் அய்யமில்லை. ஆனால் அதற்கான முன்னோடி நீதிக்கட்சி என்பதையும் இணைத்துப் பார்க்கும்போது நீதிக்கட்சித் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்துகொள்ளமுடியும். ஆம், 1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் “விவீபீ ஞிணீஹ் விமீணீறீs ஷிநீலீமீனீமீ” என்ற பெயரில் மதிய உணவுத் திட்டம் முதன்முறையாகக் கொண்டுவரப்பட்டது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலின் அனுமதியுடன் முதற்கட்டமாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இந்தத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு மாணவனுக்கான உணவுச் செலவு ஒரு அணாவைத் தாண்டக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஒரப்பாளையம், மீர்சாகிப் பேட்டை, சேத்துப்பட்டு என்று மெல்ல மெல்ல விரிவுபடுத்தியது நீதிக்கட்சி அரசு. அதன் பலனாகப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

மதிய உணவுத் திட்டத்துக்கென திடீரென அதிகரித்த நிதிச்செலவு பிரிட்டிஷ் நிர்வாகத் தினரை யோசிக்க வைத்தது. விளைவு, மதிய உணவுத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை விழுந்தது. 1 ஏப்ரல் 1925 அன்று மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன் எதிரொலி பலமாகக் கேட்டது. ஆம். பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி. திட்டத்தை நிறுத்தியது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் பிரச்னை எழுந்தது. எனினும், நீதிக்கட்சித் தலைவர்களின் தொடர் முயற்சிகளின் பலனாக அந்தத் திட்டத்துக்கு மீண்டும் உயிர் தரப்பட்டது. மீண்டும் ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில்உணவுகிடைத்தது. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே 1956 ஆம் ஆண்டில் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம். இன்று உயர்படிப்புகளைப் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு, தகுதித்தேர்வு என்றெல்லாம் மத்திய அரசு தன்னால் இயன்ற முட்டுக் கட்டைகளை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் மாணவர்களின் எதிர்காலக் கல்வி விஷயத்தில் அப்படியான முட்டுக்கட்டைகள் எதுவும் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அதுதகர்த் தெறியப் படவேண்டும் என்பது நீதிக்கட்சியின் நிலைப் பாடு. அதை செயல்வடிவத்திலும் காட்டியது நீதிக்கட்சி அரசு.

அன்றைய காலகட்டத்தில் ஒருவர் மருத்துவப் படிப்பில் சேரவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இது யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்பது வெள்ளிடைமலை. ஆகவே, அந்த நடைமுறையைச் சட்டரீதியாக அகற்றியது நீதிக்கட்சி அரசு. அதன்மூலம் மருத்துவப்படிப்பு என்ற எட்டாக்கனி எல்லோருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின.இதில் கவனிக்கத்தக்க விஷயம், இந்த உத்தரவைப் பிறப்பித்தமுதலமைச்சர் பனகல்அரசர் ராமராய நிங்கார் சமஸ்கிருதம் கற்றவர். வெறுமனே சமஸ்கிருத வெறுப்பின் அடிப்படையிலான உத்தரவு என்று சுருக்கமுயல்வோருக்கான தகவலாக இதைப் பதிவுசெய்வது அவசியம்.

இந்தியாவில் இட ஒதுக்கீடு, இடப்பங்கீடு, சமூக நீதி என்றெல்லாம் துணிச்சலாகப் பேசக்கூடிய மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். அதன்பிறகுதான் ஏனைய மாநிலங்கள். உண்மையில், அதற்கான வித்து நீதிக்கட்சி காலத்தில் இடப்பட்டது என்பது தொடர்ந்து கவனத்துக்குக் கொண்டுவரவேண்டிய செய்தி. ஏனென்றால், இன்று இட ஒதுக்கீட்டின் வழியாகவேபட்டம் பெற்று,அதன்வழியாகவே வேலை வாய்ப்பு பெற்று, அதன் வழியாகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் இளைஞர்களில் அநேகர் இட ஒதுக்கீட்டை இழிவாகப் பார்க்கும் குணமுடையவர்களாக இருக்கிறார்கள். இடஒதுக்கீடு எதிர்ப்புஎன்பதை தங்களுக்கான பெருமித அடையாளமாகக் கட்டமைத்துக்கொள்கிறார்கள். இது அபாய கரமானஅறியாமை. அவர்களுக்கு உண்மையை உரத்துச் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆம், கல்வியும் வேலைவாய்ப்பும் அங்கீகாரமும் முன்னேற்றமும் அந்தஸ்தும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே ஏகபோக உரிமை கொண்டது என்ற நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆம், பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்பதற்கும் அரசுவேலைக்கும் உரிமை கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல, தகுதி கொண்டவர்கள் என்ற நிலை இருந்தது. விளைவு, பிராமணர் அல்லாதார் எல்லாம் மேற்கண்ட வாய்ப்புகளில் இருந்து புறம் ஒதுக்கப்பட்டுக் கிடந்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் சமூகநீதியை வழங்க வேண்டும், அவர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள் கிடைக்கவேண்டும், அதன் வழியே தனிவாழ்க்கையில் வளர்ச்சி, சமூக வாழ்க் கையில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்றெல்லாம் முதலில் சிந்தித்தது நீதிக்கட்சி. அதன் விளைவுதான் வகுப்புவாரி ஆணை. பள்ளத்தில்கிடந்தபலரையும்கைத்தூக்கிவிட்ட பெருமை நீதிக்கட்சி கொண்டுவந்தவகுப்புவாரி ஆணைக்கு உண்டு.

இப்படி, நூற்றாண்டு கொண்டாடும் நீதிக் கட்சியின் பங்களிப்பு குறித்துப் பேசவும் எழுதவும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இளைய தலைமுறையினர் படித்துப் புரிந்துகொள்வது அவர்களுக்கான பாதையைத் துலக்கமாக்கும்!

Pin It