1983 ஆம் ஆண்டில் தொகுத்து 2003 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளாக தோழர் வீரமணி அவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த குடி அரசு இதழ்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 2003 ஆம் ஆண்டில் (1925 குடி அரசு) வெளியிடப்பட்டது. 1925 முதல் 1938 வரையிலான 28 தொகுதிகளை மொத்தமாக 2008 ஆம் ஆண்டு பெரியார் தி.க வெளியிடத் தயாரானபோது, பெரியார் சிந்தனைகள் வெளிவராமல் தடுக்க தன்னால் ஆன எல்லா வகையான காரியங்களையும், சட்ட ரீதியான காரியங்களையும் செய்து பார்த்தார் தோழர் வீரமணி. பொறுமையாகக் காத்திருந்தோம். 

உயர் நீதிமன்றம் தோழர் வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்துள்ளது. நீதிபதி சந்துரு அவர்கள் குடி அரசை பெரியார் தி.க வெளியிட எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பு கொடுத்தார். அதையும் எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்தார். 'அந்த மேல்முறையீடும் நியாயமில்லை. பெரியார் திராவிடர் கழகம் குடி அரசு தொகுப்புகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை' என 09.06.2010 அன்று மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் தீர்ப்பு அளித்திருக்கின்றனர்.

பெரியாரின் சிந்தனைகள் எவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல. ஆனால் மீண்டும் தோழர் வீரமணி பெரியாரைத் தன் தனிப்பட்ட சொத்தாக்கி, அதன் வழியாக தன் மகனுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க எந்த எல்லைக்கும் போவார். எனவே பெரியாரின் கருத்துக் கருவூலங்களை - 2000 ஆவது ஆண்டிலிருந்து 2010 ஆம் வரை 10 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகம் உழைத்து, தேடித் தேடி அலைந்து தொகுத்து அச்சிட்ட 28 தொகுப்புக்களை இலவசமாக அனைவருக்கும் அனுப்பி வைக்கிறோம். படித்து பாதுகாத்து வையுங்கள். பல இலட்ச ரூபாய் பொருள் நட்டம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அச்சிட்ட தொகுப்புகள் விற்பனை ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெரியார் கருத்துக்கள் அனைவருக்கும் செல்ல வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைக்கிறோம்.  படியுங்கள் - பரப்புங்கள் - வாழ்வில் கடைபிடியுங்கள்.

குடிஅரசு 1925 தொகுப்பு முன்னுரை

குடிஅரசு 1925 தொகுப்பு

குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1935 தொகுப்பு பகுதி 1

 

குடிஅரசு 1935 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 2

ரிவோல்ட் ஆங்கில நூல் தொகுப்பு

 

- பெரியார் திராவிடர் கழகம்

Comments

11 comments

11
ssk
பெரியாரின் சிந்தனைகளை தொகுத்து உலகோர் எளிதில் பெரும் வண்ணம் இணையத்தில் வெளியிட்டு மாபெரும் சாதனை செய்து உள்ளீர்கள். உங்கள் சேவையை போற்றுகிறேன்.

இவற்றில் சிலவற்றையாவது இன்றைய மக்கள் படித்தால் தங்கள் வாழ்வை மேம்படுத்தி கொள்ளலாம்.
ச. வீரமணி
குடியரசு இதழ்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டிருப்பதன் வாயிலாக மாபெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கிறீர்கள்.

நெஞ்சம் நிறைந்த நன்றி. இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொணட அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.

தோழமையுடன்
ச.வீரமணி
Thiravidan
I AM VERY THANK AND APPRECIATE YOUR HARD WORK.
Morthekai
I couldn't download... please correct if any problem.
Morthekai
I would like say "Oh, my God, these are available online"! Anyway I already said to myself for these invaluable treasures. Thanks a lot.
Yuvabharathi kandhakapookkal
குடியரசு இதழ்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டிருப்ப தன் வாயிலாக மாபெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கிறீர்கள்.

நெஞ்சம் நிறைந்த நன்றி. இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொ ணட அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.
Thamizhavel
Thamizh samuthaym unkaluku nandri kadan pattirukkirathu.
N SIVANESAN
Kudiyarasau 1935 -1 is missing in the list of eBooks. Please arrange to upload.
Arun Jothi
நன்றி தோழர்களே !!!
Abdur Raheem
பெரியார் சொன்னது எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் திராவிடர்களே ! அதுபோல் பாலஸ்தீனியர்களும் திராவிடர்களே -என்ற கருத்து NEWS 7 -ல் பார்த்தேன் இன்று பாலஸ்தீனம் சம்பந்தப்பட்ட ஒரு ஆவணப் படத்தில் -அதன் முழு விபரம் கிடைக்குமா பெரியார் சொன்னது பற்றி ?

https://youtu.be/10De8C_HxHA

13:58 Min பார்க்க
M.KAJA MOHIDEEN
எங்கெல்லாம் தேடி அலைய
இறுதியில் பணம் கொடுத்து வாங்க முடியாத கதியில்
இப்போது
இலவசமாக
நன்றி நன்றி
கி.வீரமணி ஐயா
மேலும் ஒரு செய்தியை பதிவு செய்கிறேன்
நான் இதுவரை பேசிய ஆட்களில் 50% பெரியார் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.