சுயாதீன கலைத் திரைப்பட மையம் உலகில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்குமான தமிழ்த் திரைக்கதைப் போட்டியை நடத்துகின்றது.

முதலாவது பரிசு : 250 கனடிய டொலர்கள்

இரண்டாவது பரிசு : 150 கனடிய டொலர்கள்

மூன்றாவது பரிசு : 100 கனடிய டொலர்கள்

போட்டி விதிகள்

1. திரைக் கதைகள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

2. திரைக்கதை 5 நிமிடங்களுக்கு மேற்பட்டதாகவும் 15 நிமிடங்களுக்கு உட்பட்டதுமான திரைப்படத்துக்குரியதாக இருத்தல் வேண்டும்.

3. 12 புள்ளிகள் எழுத்துருவில் ஒளி அச்சில் அல்லது தட்டச்சில் 30 பக்கங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

4. தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் தட்டச்சில் பிரதியாக்கப்பட்டிருக்க வேண்டும்.

5. போட்டிக்கு அனுப்பப்படும் திரைக்கதை, ஏற்கனவே திரைப்படமாகவோ, நூல் வடிவிலோ வெளிவந்திருக்கக்கூடாது.

6. இந்தத் திரைக்தை உரிமையாளராக, திரைக்கதையாசிரியர் இருத்தல் வேண்டும்.

7. வேறு ஒருவரின் கதையோ, இல்லையேல் நூலோ திரைக்கதையாக்கப்பட்டிருப்பின் மூல எழுத்தாளரின் கையொப்பமிட்ட கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

8. திரைக் கதைக்குரிய வடிவில் முழுமையாக இருத்தல் வேண்டும்.

9. ஒருவர் எத்தனை பிரதிகளும் சமர்ப்பிக்கலாம்.

10. கூட்டாகவோ இல்லேயேல் இணைந்தோ திரைக்கதை சமர்ப்பிக்கலாம்

11. படைப்பாளிகளின் பெயர், வதிவிட விபரம் இணைக்கப்படல் வேண்டும்.

12. பிரதிகளின் முகப்புப் பக்கத்தில் மட்டுமே பிரதியாசிரியரது பெயர் இருத்தல் வேண்டும். பிரதிகளினுள்ளே இருத்தல் கூடாது.

13. பிரதிகள் திருப்பி அனுப்பப்படமாட்டா.

14. தேர்வாகும் ஜந்து பிரதிகள் நூல் வடிவில் வெளிவரும்.

15. பிரதிகள் இ-மெயிலில் அனுப்பப்படின் பி.டி.ப்(PDF) வடிவத்தில் இருத்தல் வேண்டும்.

16. முடிவு திகதியின் பின்னர் கிடைக்கும் பிரதிகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

17. நடுவர்களின் முடிவே இறுதியானதும், தீர்மானதுமாகும்



போட்டி முடிவுத் திகதி மாசி 15, 2008 (Februray 15-2008)

Pin It