அன்பார்ந்த நண்பர்களே!

என்றும் இல்லாத புதிய நெருக்கடியை நம் நாடு சந்தித்து கொண்டிருக்கிறது. சமூகநீதி-சுதந்திரம்-சமத்துவம் விரிவுபடுத்த மக்கள்திரள் போராடி கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை வழிகாட்டும் சமூகநீதி - சுதந்திரம் - சமத்துவம் - குடியரசை படிப்படியாக குறைக்கும், இல்லாமல் செய்யும் சதிகள் நாளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

சமூகநீதி- சுதந்திரம்- சமத்துவம்- குடியரசு போன்றவை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுக்குள் தானாக வரவில்லை. அவை மக்கள் திரள் போராடி பெற்ற உரிமைகளாகும். இதைதான் அண்ணல் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை வழிகாட்டுதலாக வழிவகுத்து கொடுத்தார்.

இன்றைக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் 60 ஆண்டுகளுக்கு பின் என்ன, எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை விரிவாக ஆய்ந்து புரிந்து கொள்ள அனைவரும் வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!

நாள்: 16-03-2019 சனிக்கிழமை 
நேரம்: காலை 10 .00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: பி.ஜே. அரங்கம், மெரினா வாளகம், தமிழ்த் துறை , சென்னை பல்கலை கழகம், சென்னை.(தமிழ் துறை இதர மொழித்துறை வளாகம், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தம், திருவள்ளுவர் சிலை எதிரில்)


சனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை (OPDR)  நடத்தும்
அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை வழிகாட்டும் 
சமூகநீதி-சுதந்திரம்-சமத்துவத்தை 
பாதுகாக்கும் மாநாடு

தொடக்க சிறப்புரை: 

மாண்புமிகு நீதிபதி செல்லமேஸ்வரர்
மேனாள் நீதியரசர் உச்ச நீதிமன்றம்டில்லி

Justice Jasti Chelameswar, Retired judge, Supreme Court of India .

சிறப்புரை:
மாண்புமிகு நீதிபதி அரிபரந்தாமன்
மேனாள் நீதிபதிசென்னை உயர்நீதி மன்றம்.

முன்னுரை: 
சிக்குரூபதி பாஸ்கர், தலைவர், OPDR
வழக்கறிஞர் சங்கர சுப்பு, சென்னை உயர்நீதி மன்றம முனைவர் சுப.மனோகரன், பொதுசெயலாளர், OPDR

வரவேற்புரை
வழக்கறிஞர் கிருஷ்ணா, அமைப்பாளர், OPDR
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
வழக்கறிஞர் கார்த்திகேயன் வழக்கறிஞர் முருகன்
வழக்கறிஞர் பிரசாத் வழக்கறிஞர் விஜயன்

கருத்தரங்க அமர்வுகள்

"மதம் அடிப்படையிலான அரசும் சனநாயக அரசும்"
தலைமை :திரு. ஞான சூரியன்,
சிறப்புரை: பேராசிரியர் அ. மார்க்ஸ்

"சமூக பொருளாதாரத்தின் மீதான தாக்குதலும் அரசியம் அமைப்பு சட்டத்தின் உயர் மதிப்பீடுகள் மீதான தாக்குதல்களும்"
தலைமை: வழக்கறிஞர் விஜயலட்சுமி,
சிறப்புரை: தோழர் தியாகு

"பெண்கள் மீதான அடக்குமுறைகளும் நிலவும் சட்ட சமூகமும்"
தலைமை: திரு. மணிமாறன், ஊடகவியலாளர்,
சிறப்புரை :பேராசிரியர் ரேவதி, பச்சையப்பன் கல்லூரி

"சனநாயகம்சுதந்திரம் - இன்றைய நிலை '
தலைமை:பேராசிரியர் கோச்சடை,
சிறப்புரை: மனிதி செல்வி

(உணவு இடைவேளை: பகல் 1.30 முதல் 2.15 வரை... நண்பர்கள் முன்கூட்டியே பதிவு செய்வது சிறப்பு.. தேவையான உணவு ஏற்பாட்டை செய்ய உதவும்)

நன்றிவுரை: எழுத்தாளர் கி.நடராசன்

அனைவரும் பெருந்திரளாக வருக, ஆதரவு கரம் நீட்டுக!

தொடர்புக்கு: 
வழக்கறிஞர் முனைவர் சுப.மனோகரன்,பொதுசெயலாளர், OPDR
செல்பேசி: 99401 76599, 9840855078

Pin It