save perarivalan 620

இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக தனிமைச் சிறையில் வாடும் ஏழு தமிழர் விடுதலை கோரி இருசக்கர ஊர்திப் பேரணி 11.06.2016 காலை 8 மணிக்கு, வேலூர் நடுவண் சிறை முன்பிருந்து புறப்பட்டு, வழிநெடுகக் கோரிக்கை ஞாயத்தை எடுத்துக்கூறி, பிற்பகல் சென்னைக் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செயலலிதா அம்மையார் அவர்களிடம் விண்ணப்பம் அளிக்க உள்ளதாக அறத்தமிழ் அன்னை அற்புதம் அம்மாள் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் இவ்விரு சக்கரப் பேரணியில் வேலூரிலிருந்து கலந்து கொள்கிறார்கள். நான் பூவிருந்தவல்லியிலிருந்து இப்பேரணியில் பேரியக்கத் தோழர்களுடன் கலந்து கொள்கிறன்.

மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்வது கடமையாகும்.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஏழு தமிழர் விடுதலையைக் கோரியுள்ளது. வாச்பாயி அவர்கள் தலைமை அமைச்சராக இருந்த போது  2004இல் இந்திய அரசு, வாழ்நாள் சிறையாளிகள் பொதுவாக 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியதில்லை என்றும், எப்படிப்பட்ட கொடுங்குற்றம் புரிந்தவராக இருந்தாலும் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் (அஃபிடவிட்) தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-இன் கீழ் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய இந்திய அரசின் கருத்தைக் கேட்ட போது, எதிர்மறையாகச் செயல்பட்டது நரேந்திர மோடி அவர்களின் அரசு.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம், தமிழ்நாடு அரசின் கோரிக்கை, தமது கட்சி முந்தைய ஆட்சியில் நடுவண் அரசு அளித்த உறுதிமொழி ஆவணம் ஆகிய அனைத்திற்கும் மாறாக திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு ஏழு தமிழர் விடுதலையில் எதிர்மறை அணுகுமுறை கொண்டிருப்பது சரியன்று. நடுவண் ஆட்சியாளர்கள் சட்டநெறி, மனித உரிமை, தமிழ் மக்களின் உணர்வு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தங்கள் அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏழு தமிழர் விடுதலைக்குத் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ஐ மட்டும் சார்ந்திராமல், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யும் சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டநெறி, மனித உரிமை, தமிழின உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 11.06.2016 இருசக்கரப் பேரணியில் வேலூரிலிருந்து சென்னை வரை தமிழ்நாட்டு இருபால் இளையோர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Comments

5 comments

5
Manikandan
நீதிமன்றம் இவர்களின் விடுதலையை மத்திய அரசு மட்டுமே செய்யமுடியும் என்று சொன்ன போது, இவர்களின் குற்றங்களை பற்றி விளக்கமாக சொல்லி இவர்களின்த விடுதலை எனபது தவறானவர்களுக்கு காட்டப்படும் இறக்கம் சமூகத்திற்கு தீங்கை விளைவிக்க கூடியது என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் நீதிமன்றங்களை நம்பாமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அத்தனை பொய்களையும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.

பேரறிவாளன் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றத்தில் அதை நிருபிக்கலாமே ஏன் விடுதலை புலி ஆதரவாளர்கள் ஒருவரும் அதை செய்வதில்லை.... காரணம் நீதிமன்றங்களை இவர்கள் ஏமாற்ற முடியாது நம்மை போன்ற சாதாரண மக்களை தானே இனவாதம் மூலம் ஏமாற்றலாம்.
Manikandan
இந்தியா ஒரு இளிச்சவாய தேசம் இந்திய பிரதமரையும் அப்பாவி மக்களையும் குண்டு வைத்து கொன்றால் கூட தண்டனை இல்லாமல் இனவாதம் தூண்டி விட்டு தப்பி விடலாம் என்பது எல்லா தீவிரவாத இயக்கங்களும் நினைத்து கொண்டு இருக்கின்றன.

அதனால் தான் அஜ்மல் கசாப் நேபாளில் இருந்து வந்த அப்பாவி, அப்சல் குரு ஒரு அப்பாவி, பேரறிவலனுக்கு ராஜீவ் காந்தி என்றால் யார் என்றே தெரியாத அப்பாவி என்று எல்லா தீவிரவாத இயக்கங்களும் ஒரே மாதிரி பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த அநியாயத்திற்கு பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், நடிகர்கள் என்று பல ஆதரவு வேறு.
Manikandan
உங்களை எல்லாம் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன் உங்கள் யாருக்கும் எங்களை போன்ற சாதாரண மக்கள் பற்றி எந்த ஒரு அக்கறையும் கிடையாதா... தீவிரவாதிகளால் நாங்கள் கொலை செய்யபட்டால் உங்களை போன்றவர்களுக்கு அது ஒரு collateral damage அதற்கு மேல் எங்கள் மீது எந்த ஒரு அக்கறையும் கிடையாது அப்படி தானே...

நாம் தான் இலங்கை தீவிரவாதிகளுக்காக நம் நாட்டையும் நம் அமைதியான வாழ்வையும் அழித்துக்கொள்ள தயாராக இருக்கிறோமே
Vannai Abu
according your point of view, late Rajiv Gandhi, not aTamil,but what is your answer for the Tamil police officers who also got killed with Rajiv Gandhi during the Blast...
this inmates should thank god for they not get death penalty and their life spared
..I want to say one thing,,this people( Organizers of this Demonstration) simply defaming tamils & tamilian people
manivannan
திரு . மணிகண்டன் அவர்களே நல்லா இருக்குங்க உங்க நியாயம்? தீவிரவாதிகளா? யார்? 1. பட்டப் பகலில் 3 கோவை கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்றவர்கள் யார் தேச பக்தர்களா? 2. பரமக்குடியில் காவல்துறையே 7 அப்பாவி ஒடுக்கப் பட்ட மக்களை துப்பாக்கி சூட்டில் கொன்றதே அது என்னமாதிரியான அன்பு ? 3. இதோ அன்றாடம் குடி நோயாளிகளை உருவாக்கும் ஒரு அரசு !
நாம் நேராக சென்றாலும் நம் மக்களை வந்து குடித்துவிட்டு ஒரு நாளைக்கு 400 பேரை பரலோகம் அனுப்பும் குடியை அனுமதித்து கொள்ளும் ஆட்சியாளர்கள் தேச பக்தர்கள் ! ராஜீவை கொன்றவர்கள் என்ற ஒத்த செத்த காரணத்தை வைத்து 25 வருசமா சிறையில் வச்சி கொடுமைபடுத்துவீங்க அதை தமிழகம் பார்த்துகிட்டு சும்மா இருக்கனுமா?
பல பேரு பல முறை கேட்டுட்டாங்க ... உங்களுக்கு தெரியாதா ? தெரியும் ! இருந்தாலும் சொல்றேன் a ) அது எப்படிங்க ராஜீவ்காந்தி சாகுறப்ப ஒரு காங்கிரசு காரன்கூட சாகல? B ) கேமரா காரு ஹரிபாபு / 17 அப்பாவி காவலர்கள் / உங்க பாச தலைவரு ராஜீவு காந்தி மீதிபேர் எல்லாருமே பாதுகாப்பா இருந்துகிட்டான்களே இது ஒரு தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட படுகொலையா? சி) குற்றம் சாட்டப் பட்டவர்கள் யார் என உங்களுக்கு தெரியுமா? 13 நபர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் ! 13 நபர்கள் இலங்கையை சார்ந்த தமிழர்கள் ! 26 பேருக்கும் தூக்கு ! D ) தமிழக உழைக்கும் மக்களிடம் இவ் வழக்கில் உள்ள குளறுபடிகளை பட்டிதொட்டியெல்லாம் சொல்லி இது தமிழக மக்களை குற்றவாளியாக்குகின்ற டெல்லியின் திட்டமிட்ட சதி நடவடிக்கை என அம்பலப் படுத்தி தமிழக மக்கள் கொடுத்த 5.00 ரூபா 10.00 ரூபா 50/ 100/ என சேர்த்து 15 லட்சாம் ரூபாவுக்கும் மேல கொண்டு பொய் நீதி மன்றத்தில் ''இவ்வழக்கு ஜோடிக்கப் பட்ட பொய் வழக்கு '' என நிரூபித்து உடனே 19 பேருக்கு விடுதலை வாங்கி கொடுத்தோம் !
எல்லாவற்றிற்கும் மேலாக நீங்க இப்ப சொல்றீங்களே ? தீவிரவாதி வெங்காய கதையை ...... இந்த அப்பாவி தமிழர்களை மிரட்டி மேலிடத்து பிரஷர் காரணமா நாந்தான் கை எழுத்து வாங்கினேன் ' இவர்கள் அப்பாவிகள் ' சாகுர நேரத்துல எனது மனசாட்சி என்னை கொல்லுது நு சொன்னாரே ? அடித்து சித்திரவதை செய்து, தாகத்திற்கு தண்ணீர் தராம/ மலம் சிறுநீர் உபாதைகளை கழிக்க விடாம/ பட்டினி போட்டு கொன்னு சித்திரவதை செஞ்ச காவல் உயர் அதிகாரி ! அப்பலாம் நீங்க எங்க வெண்ணை வெட்ட போயிருந்தீங்கன்னு தெரியலியே அய்யா ?
இப்ப நாங்க விடுதலை செய்ய சொற்ப இவ்ளோ பேசுற நீங்க அப்பா எங்க பொய்அ தொலைஞ்சீங்க ? அவர் அப்படி சொன்ன பிறகு தான்யா அவங்க அப்பாவின்னா பின்ன ஏன்யா இன்னும் சிறையில் வச்சிருக்கீங்கனு கேட்கிறோம் ! உடனே கிளம்பிடீங்க தீவிரவாதி நாடகம் நடத்த ! ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினவரே சொன்ன பிறகு...............
மத்திய அரசு தமிழக அரசு நினைச்சா விடுதலை செய்யலாம்னு சொல்ல .... உடனே இந்த அம்மா ஒரு வாரத்துல விடுதலை னு சொல்ல ..... அப்புறம் மத்திய அரசு இன்னொரு விதிய காட்டி தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லன்னு சொல்ல ...... இந்த அதிகாரமற்ற தமிழக பொம்மை அரசுக்கு ஒரு பண நாயக தேர்தல் வர ...... அப்புறம் அந்த பாழாய்ப்போன தேர்தல்ல ஒரு ரிசல்ட் வர ......... இந்த தாமதமான நீதியை வாங்க 25 வருஷம் ஆனது பத்தாம இப்ப அநியாயமா 2.5 வருஷம் வேற உங்க மாதிரி ஆளுங்களால ஆயிகிட்டு இருக்கு !
அப்பாவிங்கனு தெரிஞ்சும் தமிழக மக்கள் இந்த 7 தமிழர்களை உள்ள விட்டா வரலாறு நம்மை கோழை னு காறித்துப்பும் ! கடைசியா ஒன்னு .... உண்மை தெரியாம பேசுற உங்களுக்கே நாளை ஒரு பாதிப்புனா தமிழ் தேசிய அமைப்புகள் உங்களுக்காகவும் நிற்கும் !
தமிழ்தேசத்தின் பிரச்சினையை பேசினாலே உடனே '' இன வாதம்னு '' கிளம்பிடறீங்க? அப்பனா இந்தியா எங்கள என்ன செஞ்சாலும் நாங்க விரல் சூப்பிகிட்டு பாப்பா போல கிடைக்கணும்னு நினைக்கறீங்க ? அது சரி .... உங்களுக்கென்ன ? ! வலியும் கொடுமையும் அநியாயமாக 25 ஆண்டுகள் அனுபவிக்கும் சிறைக் கைதிகளுக்குதான் வேதனை தெரியும் .... உங்களைப்போன்ற பணக்கார சுவை கொண்டவர்களுக்கு தெரியாது பாமர மக்களின் வேதனை !
( ஆச் வூச் நா கிளபிடறீங்க .... ஆனானப்பட்ட ராஜீவ் காந்திய கொன்னவங்கலையே விடுதலை செய்ய சொல்றீங்கலேன்னு ? அது என்ன ராஜீவு? பிரதமரு? நம்மள மாதிரி சாதாரண மக்களோட உசுரு எல்லாம் மசுரா? பிரதமரே ....... அது என்ன பிரதமரே ? அவரும் மனுசன்தானே? இது தான் காலம் காலமா நம்ம மனசுலாய் ஊறிக்கிடக்கும் அடிமை புத்தி ..... இந்த அடிமைபுத்திதான் திரு விடுதலை ராஜேந்திரன் ராஜீவ் கொல்லப்பட்ட உடனே எழுதிய ' ராஜீவ் கொலையும் மறைக்கப் பட்ட உண்மைகளும் ' புத்தகத்தின் பின்னாலும் ' ராஜீவ் கோழியில் பின்னால் மறைதிருக்கும் iru சாமிகள் புத்தகத்தையும் / பேரறிவாளன் எழுதிய ' சிறை கொட்டடியிலி இருந்து ஒரு முறையீட்டு மடல் ' புத்தகத்தையும் முருகன் எழுதிய ' " கயிறே என் கதை கேள் " புத்தகங்களில் உள்ள வலி/ அவமானம்/ வேதனை / அநீதி மறுப்பை காண மறுக்கிறது ! உங்க கண்ணை அடிமை மனோபாவம் எனும் திரை மறைக்கிறது ! வெளிய வாங்க .... அப்பா உங்க கண்ணுக்கு இன வாதம் தெரியாது ! தமிழக மக்களாகிய நாம் 2000 ஆண்டுக் காலமாக உரிமை மறுக்கப்பட்டுக் கிடக்கும் உண்மை உங்களுக்கு தெரியும் ! ) நன்றி !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.