மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், மனித உரிமைப் போராளியுமான மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் நினைவு சொற்பொழிவு வரும் 9.11.2014 ஞாயிற்றுக்கிழமை, சென்னை, தி.நகரில் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள வித்யோதா பள்ளி அரங்கில் காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெற உள்ளது.

இச் சொற்பொழிவு நிகழ்வில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வரும், முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு.விக்னேஸ்வரன் “பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதுகாத்தல்” (SAFEGUARDING SECURITY AND SOVEREIGNTY) என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களுக்கு மரியாதையினை செலுத்தும் வகையிலும், மேலும் அசாதாரண‌ சூழலில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்ற பின் இந்தியாவில் நீதிபதி விக்னேஸ்வரன் பங்கேற்கும் முதல் நிகழ்வாகவும் இந்த நிகழ்வு அமைய உள்ளது.

எனவே தோழர்கள் மற்றும் சனநாயக ஆர்வலர்கள் இந் நிகழ்வில் பங்கேற்று தோழமையினை வழங்க வேண்டுமாயும் அன்புடன் கோருகிறோம்.

- ச.பாலமுருகன், பொதுச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

Comments

1 comment

1
m.r.stalin
இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் அமுலில் இருந்த சுமார் 30 வருட காலகட்டத்திலும் பூசா,வெலிக்கடை சிறைச்சாலைகளில் ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்கள் அடைக்கப்பட்டனர்.அக்காலகட்டம் முழுக்க சிறிலங்கா பேரினவாத அரசுகளின் கைபொம்மை நீதிபதியாக கொழும்பில் பணிசெய்தவர் இந்த விக்கினேஸ்வரன்.அதனூடாக தமிழின போராட்டத்தை ஒடுக்கி இலங்கையரசின் முக்கிய பாகமாக இயங்கிய நீதி துறையின் உச்ச பதவியாகிய உயர் நீதி மன்ற பதவியை பெற்றுக்கொண்ட இந்த விக்கினேஸ்வரன்.இவர் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், மனித உரிமைப் போராளியுமான மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் நினைவு சொற்பொழிவு ஆற்ற எப்படி முடியும்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.