umargayan_loyola_590

umargayan_loyola_640umargayan_loyola_591

Comments

4 comments

4
தமிழ்செல்வன்
விடுதலையை நோக்கி...எழுச்சி!!! இது தமிழகத்தில் ஒரு தொடர்ச்சி!!!!விடுதலைக்கு வித்திட்டா இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்துக்கு என் வாழ்த்துக்கள்.....
தமிழ் தமிழன்
குண்டுகள் வைத்தும்,அதற்கு உதவியும் செய்த குற்றங்களுக்காக சிறையில் இருப்பவர்களை அரசியல் கைதிகள் என்றால் திருடர்கள்,கொள்ளையர்கள் மற்றும் பாலியல் வன்முறை குற்றத்திற்காக சிறையில் இருப்பவர்களும் அரசியல் கைதிகள் என்று அறிவித்து அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோர வேண்டியதுதானே.அதுதானே நியாயம். எந்த அடிப்படையில் இவர்கள் டாக்டர் அம்பேத்கர்,பெரியார் படங்களை பயன்படுத்துகிறார்கள். பெரியாரின் போராட்டங்கள் வன்முறையற்ற போராட்டங்கள்,அறவழிப் போராட்டங்கள்.
அவர் ஒரு போது வெடிகுண்டு வை,கலவரம் செய், கொலை செய் என்று கூறவில்லை.அப்படி செய்ததற்காக தண்டனை பெற்றவர்களை விடுவிக்க கோருவோர் அம்பேத்கர், பெரியார் படங்களை போட்டு அவர்களை இழிவு செய்ய வேண்டாம்.
விடுதலை
தோழர் தமிழ் தமிழனுக்கு... கடமையை செய்..பலனை எதிர் பாராதே... என்கின்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டு செயல்படும் காவி மடங்கள் மற்றும் காவி துறவற அமைப்புகளே இன்று உழைக்கும் மக்களை விட வலுமிக்க போராட்டங்களை கையிலெடுக்கும் போது... இவர்களை மன்னிப்பது நியாயம் தானே..!
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
தோழர் தமிழ் தமிழன்... நாம் குண்டு வைத்தவர்களையும் கொலை செய்தவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கவில்லை... தவறு செய்தவர்களா தண்டனை பெற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை... நாம் போராடுவது குற்றமற்ற அப்பாவிகளின் விடுதலைக்காக... குற்றம்சாட்டபட்டதினாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிடமாட்டார்... நாம் போராடுவது குற்றம்சாட்டப்பட்டு சுமார் பதினான்காண்டு காலமாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்காகதான்...

இதற்க்குமுன்னதாக பல்லாண்டுகாலம் சிறைபடுத்தபட்டு முடிவில் குற்றமற்றவர்களாக விடுதலையடைந்தவர்களும் இருக்கிறார்கள்... அவர்கள்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை பொய் என நீதியின் முன்னாள் நிருபித்து அவர்கள் விடுதலையடைந்திருக்கலாம்... ஆனால் அந்த பொய் வழக்கால் அவர்கள் இழந்த இளமை வாழ்க்கை அவர்களுக்கு திரும்ப கிடைக்குமா...?

மீண்டுமொருமுறை அத்தகைய மோசமான முன்னுதாரணம் நிகழக்கூடாது என்பதற்குதான் இன்றைய அறவழி போராட்டம் தயவுசெய்து மனிதாபிமானத்துடன் மனிதநேயத்துடன் இவ்விவகாரத்தை பாருங்கள்... நியாயம் விளங்கும்... நியாயத்திற்கும் அநீதி எதிர்ப்பிற்கும் போராடிய தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் படங்களை நாங்கள் பயன்படுத்துவது நிச்சயமாக அப்பெருமகனார்களுக்கு பெருமையையே சேர்க்கும்...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.