மார்க்சிய சிந்தனை மையம் ஒவ்வொரு மாதமும் நாகர்கோவிலில் மார்க்சிய படிப்பு வட்டத்தை  சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்  கலந்து கொள்கிறார்கள். இந்த மாதத்திற்கான வகுப்பு வரும் 27.11.2011 அன்று நாகர்கோவில், தக்கலை, லைசியம் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த படிப்பு வட்டத்தில் கடந்த இரண்டு வகுப்புகளில் நடத்தப்பட்டு வரும்   இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி தோழர் அ.ஆனந்தன் அவர்களால் எடுக்கப்பட இருக்கிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : லைசியம் பள்ளி, தக்கலை , நாகர்கோவில்
நாள் : 27 .11 .2011 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணி
பொருள்  : இயக்கவியல் பொருள்முதல்வாதம்
தலைமை : தோழர்.பிரசாத்
சிறப்புரை :தோழர். அ.அனந்தன்
ஒருகிணைப்பாளர் : தோழர்.போஸ்

தொடர்பிற்கு : தோழர் மகிழ்ச்சி செல் : 9443347801

Comments

4 comments

4
mathavan.p
நல்ல முயற்சி தொடர வாழ்த்துகள்
devaraj
இது போல ஒவ்வொரு ஊரிலும் தொடங்க வேண்டும்
mahizhchi
எது வளரும் முரண்பாடு -நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்
27 .11 .2011 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி இந்த மாதம் எடுக்கப்பட்டது.

உலகம் முழுக்க பிரதான முரண்பாடாக இருப்பது முதலாளி, தொழிலாளி முரண்பாடே. ஒவ்வொரு நாட்டிலும் எந்த முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கிறது , எது வளரும் முரண்பாடு , உள் முரண்பாடு எது?,வெளி முரண்பாடு எது? என்பதை பற்றி பல்வேறுபட்ட தரவுகளோடு விரிவாக விளக்கி கூறினார். நாம் தேய்ந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளை பிரதான முரண்பாடாக கொள்ளாமல் , எது வளரும் முரண்பாடோ அந்த முரண்பாட்டை அடிப்படையாக கொண்டே கட்சி திட்டத்தை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் வகுக்க வேண்டும் என்பதை அனைவர் மனதிலும் ஆழப்பதிய வைத்தார். மிகுந்த உற்சாகத்தோடு கலந்து தோழர்கள் அனைவருக்கும் மார்க்சிய சிந்தனை மையம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.
Leo
நான் கோயம்புதுரில் வசிக்கின்ட்ரென். இங்கு வகுப்புகல் உன்டா...?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.