கீற்றில் தேட...

மதுவை
ஒத்திருக்கும் மானுடம்!

போதையென பொழிதல்
மழையாய் தெரியலாம்!
நனைதல் விசித்திரமல்ல...
சிலருக்கு சுகமென தெரிவது
ஒரு சிலருக்கு எரிச்சலாய் இருக்கலாம்!

குடை பிடிக்குமாம் காதல்....
ஆண் வாசனையை உள்ளமுக்கியபடி!
யாரோ இறைத்து சென்ற சேறும்
சட்டைப்பையில் பத்திரமாய்!

நேற்று அவளென பேசியவன்
மாறுதலுக்கு உட்பட்டு
இன்று இவளென சொல்வதில்
ஆச்சரியமும் அதிர்ச்சியும் எவருக்குமில்லை
நாளை உன்னை சொல்லாதிருக்கும் பட்சத்தில்...

தலைக்கேறிய உச்சத்தில்
முட்டிவிடுகிறான்...
அடி என்னவோ
நட்பிற்கும் சுற்றத்திற்கும்...

எதற்கும்
கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்...
கடந்து வருகிறது
சேறிறைத்து சென்ற குப்பை வண்டி!  
 
- ரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)