gemini_ganesanபெருமழைக்
காலமொன்றிலோ 
கடுங்கோடையொன்றின்
வெம்மையிலோ
வாடைப்
பருவத்திலோ
வசந்தத்தின்
வாசலொன்றிலோ
 
அடர் வனாந்திரத்தின்
ஆளரவமற்ற பொழுதுகளிலும்
உயிர் துள்ளும்
உன்னத நேரங்களிலுமென
 
வாழ்வின்
வெவ்வேறு நிலைகளில்
உங்கள்
வெண்கலக் குரல்
கொடுக்கும் இதம்
உன்னதமானது.  
 
இயல்பான நடிப்புக்கு
இலக்கணமாய்
பேட்டியொன்றில்   
நீங்கள் மொழிந்த
நடிகனின் முகம்
வெண்கலப் பானையில்
உருளும் கல்லொன்றாய்
இடையிடையே நெருடும்
இந்தப் பொழுதிலும்.
 
o
(பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு - இயல்பான நடிப்பு நடிகர் ஜெமினியுடையதே என்ற அவரின் பேட்டிக்காக)

- செல்வராஜ் ஜெகதீசன்  <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.