வீறு கொண்டிதயம் விம்பிப் புடைத்தெழ

        வீர நெஞ்சிலொரு வேகம் பிறந்தெழ

கூறு பட்டதமிழ்க் குடிக ளொன்றுபட

        கூர்ந்த பேனைமுனை கொண்டு சுவைத்தமிழ்

நூறு கவிதைகள் நெய்த பெருங்கவி

        நாளையும் நேற்றும் நம்மோ டியைந்து

ஏறு நிகர்நடை பார்வை தோற்றமுடை

        ஏற்ற புதுவைக்குயில் பாவின் வேந்தனவன்

 

சாறு பிழிந்தெடுத்துச் செய்த கவிநயச்

        சாரம் சுவைத்திடி னமுதமும் பொய்த்திடும்

சோறு சலித்திடும் செங்கனி கைத்திடும்

        சேற்றி னழகுமலர் செம்மை யயாழிந்திடும்

நாறும் தன்மையினைப் பூக்க ளிழந்திடும்

        நாதக் குழலிசையு மினிமை குன்றிடும்

பேறு பெருந்தவத்துப் பெருமை சேர்ந்ததால்

        பெண்மைத் தமிழ்மகளும் போற்றி நின்றிட

 

ஆறு மலைகடந்து மவனின் கவிபரவ

        ஆரு மவன்பெயரை யயளிதில் மறப்பரோ!

மாறு கொண்டகருத் துடைய ரேணுமவன்

        மாசி லாதகவி மாந்திச் சுவைப்பரே

சேறு கொண்டசமு தாய வமைப்பிலொரு

        மாறு தல்படைத் தார்த்த பெருங்கவி

ஏறு தனைநினைந்து என்றும் விழவெடுக்க

        ஆர்க்கும் பெருங்கட லென்று கூடுவோம்!

Pin It