கோலிகுண்டு பம்பரம்
விளையாட்டின் கூட்டாளிகள்
புளியங்காய் மாங்காய் அடிக்க
உடன் வந்த பங்காளிகள்
வாடகை சைக்கிளில்
கூடவே வலம் வந்த பயல்கள்
என பால்யத்தில் துவங்கி
சிறுவனென விலக்காமல் கிரிக்கெட்டில்
சேர்த்துக்கொண்ட அண்ணன்கள்
அக்கறையோடு வழிநடத்திய
ஆசிரியர்கள் என
பதின்ம வயதில் தொடர்ந்து
கணிப்பொறியையும் புத்தகங்களையும் எனதுபோல்
உபயோகிக்கச் செய்த உயிர் நண்பர்கள்
வாழ்க்கை குறித்தும் முன்னேற்றம் குறித்தும்
எண்ணற்ற இரவுகளில் விவாதித்தவர்கள்
என கல்லூரிப் பருவத்தில் நீண்டு
முதல் பியர் ஊற்றிக்கொடுத்தவன் வரை
எத்தனையோ பேர் இருக்க
மனசாட்சியை கேட்கிறேன்
என்ன நியாயம் இது?
சொந்த ஊர் என்றதும்
பழைய காதலியின் நினைவு
முந்தி வருவது?

காதல்
----------
சோற்றுப் பிரச்சனை தீர்ந்த
அடுத்த  நொடி
காதல் பிரச்சனை துவங்கிவிடுகிறது
ஜென்மங்களுக்கு...

காலர் டியூன்
---------------------

மதுரமாய் மயக்கிய
உன் அலைபேசியின்
அழைப்புப் பாடல்
உன் குரல் ஒலித்தபின்
தோற்றுப் போனது!


- சாணக்கியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
Kannan
super boss

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.