காதல் குறித்த கனவுகள்
தொலைந்த நொடிப்பொழுதில்
இறகை முறித்துக் கொண்டது

பறவை ஒன்று
சதுப்பு நிலத்தில் சிக்கிக்கொண்டது
ஓர் யானை
நடுவானில் நின்றுவிட்டது
எரிகல்
கொதிக்கும் திரவத்திலிருந்து
தெறிக்கும் துளிபோல
தெறித்து வெளியேறியது ஆண்மை
கடைசி மூச்சை விடும்
பெரு மிருகம் போல
அதிர்ந்து அடங்கியது உடல்
விண்மீன்களை விழுங்கிய
கருந்துளையாக சூன்யமானது மனது
பாரம் தாங்காது
மீண்டும் கனவுக்குள் விழுந்தது
ஆன்மா!
பள்ளத்தாக்கின் நடுவழியில் பற்றிய
மரக்கிளையைப் போல
காதலைப் பற்றிய கனவுகளைப் பற்றி
கடைத்தேறியது என்னுயிர்!

- சாணக்கியன் 

More articles by சாணக்கியன்

Comments

1 comment

1
Balaji
கவிதை மிக நன்ராக வந்துள்ளது.

பாலாஜி .ச

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.