அந்தியின் கண்ணீரத் துளிகளை
ஆவியாக்கி அருந்துகிறது
சூரியனின் பின்புறநிழல்

விரைந்து கொண்டிருக்கும்
காற்றலைகளில் ஏதாவதொரு
அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது
இழவுச் செய்தி

ஈட்டமுடியா இழப்பின்
நாண்களிலிருந்து
வழிகிறது குருதியின் இசை

துயரங்களின் வரிகளைத் தாங்கிய
கண்ணிழந்த கடிதமென
அசைகிறது உன் நா

காலம் குலுக்கிய உண்டியலுக்குள்
சிறிதும் பெரிதுமாய்
காலடித் தடங்கள்

விலங்கு நீர்பரப்பில்
மிதந்து கொண்டிருக்கிறது
செதில்கள் பிடுங்கப்பட்ட நிலையில்
கண்கள்

- உழவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by உழவன்

Comments

1 comment

1
saravanakumar
Excellent words keep it up.please bring out your another some poets

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.