Rainy Dayநடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்துவங்கினர்

வாகனங்களின் வேகம்
சாலைகளில்
சற்றுக் கூடியிருந்தது

குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்

இவ்வளவு
நேரமாய்ப் போகாதவன்
இப்பொழுது பார்த்தா
செல்லவேண்டும் கடைவீதிக்கு
வாஞ்சையுடன்
வருத்தப்பட்டாள் அம்மா

குளிர்பானம் விற்பவன்
சலித்துக்கொண்டான்

வராந்தாவில் விளையாடிய
குழந்தைகள்
வீட்டினுள் அழைக்கப்பட்டு
கதவு சாத்தப்பட்டது.

"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்

திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை! 

உழவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.