Labourநட்சத்திரங்களே
கீழே இறங்கி வாருங்கள்
எங்களோடு

சிறப்பு விருந்தினராகவோ
முக்கிய பேச்சாளராகவோ
வருகை தந்திருக்கலாம் நீங்கள்
எங்களுக்காகவும்
வந்திருப்பதாக சொல்லிக்கொள்கிறீர்கள்.
ஆகவே
எங்களோடு வாருங்கள்
எங்கள் இருப்புகளையும் கொஞ்சம் கவனியுங்கள்

இதுதான் எங்கள் குளியலறை என்கிறேன்
உள்ளே நுழையவும் அஞ்சுகிறீகள்
காற்றோட்டமில்லாத மிகச் சிறியதென்று

இங்கே எங்கள் கழிவறை என்கிறேன்
மூக்கைப் பிடித்தபடி எட்டிப்பார்க்கிறீர்கள்
அசுத்த கிடங்காயிருக்கிறதென்று

இங்குதான்
எங்களுக்கான உணவு தயாராகிறது என்கிறேன்
வாயை மூட முயலுகிறீர்கள்
வாந்தி வரும்போலிருக்கிறதென்று

இதோ எங்கள் அறை என்கிறேன்
முகம்சுளிக்கிறீர்கள்
'இவ்வளவு சிறிய அறையில்
இத்தனை பேரா' என்று.

அல் கூஸ்ஸோ சோனாபூரோ
தொழிலாளர் குடியிருப்புகள்
இப்படிதான்.

இப்போது புறப்படுங்கள்
பேசுங்கள்
துபாயில் தமிழர்கள்
வசதியாக வாழ்கிறார்களென்று!


இ.இசாக், துபாய் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.