Bus stopசத்யா பேருந்து வரும் வரைக்கும்
சாலையெங்கும் சிந்திய புளியம்பூக்கள்
நசுங்காமல் சிரிக்கும்

எவனோ மென்று துப்பிய
கரும்புக் கோதில்
மொய்த்த எறும்புகளும்
உயிரில் திளைக்கும்

டவுனுக்குப் போகக் கிடக்கும்
பால் கேன் ஓரம் உறங்கிவிழும்
பால்காரனின் கனவும்
வண்ண வண்ணமாய் விரியும்

வழியனுப்ப வந்திருக்கும் அம்மாவிடம்
புதுப்பெண் பேச்சும்
இன்னும் நீளும்

நடுரோட்டில்
ஒன்றையொன்று கவ்வி விளையாடும்
நாய்க்குட்டிகளின்
சந்தோசக் குதிப்பும்
ஓய்வின்றித் தொடரும்

பேருந்திலிருந்து
கணவன் தள்ளாடி இறங்கும்வரை
குழந்தையோடு கொஞ்சும்
செல்லத்தாயின் குரலும்
குடிசை தாண்டிக் கேட்கும்

அந்த ஏழரைக்குப் பிறகு
அடிக்கும் வாடைக்குப்
பிணவாடை என்று பெயர்.

பச்சியப்பன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.