
மீண்டும் தொடங்குதொரு
ஆட்டம்
எதிரிலும் புதிரிலுமாக
காய்கள் நகர
வடப்புறம் நோக்கி சில
இடப்புறம் நோக்கி சிலவென
விட்ட இடத்திலிருந்து
தொடங்குதிந்த ஆட்டம்
நசுக்குவோரை நசுக்கியும்
நக்குவோரை நக்கியும்
இம்மியளவும் நாகரீகமற்று
இத்துப்போன கொள்கைபேசி
விட்ட இடத்திலிருந்து
தொடங்கிற்று ஆட்டம்
வெற்றியோ தோல்வியோ
கேட்டவிலை கிடைத்துவிட
மக்கள் தலையில்
மஞ்சள் நீரூற்றி
மகேசர்கள் கூர்தீட்ட
விட்ட இடத்திலிருந்து
தொடங்கியே போச்சு
ஆட்டம்
சின்னமாக எல்லாமிருந்தும்
சிந்திக்க மனிதமற்று
அய்ந்தாண்டோ அடிக்கடியோ
கரைவேட்டி புடைசூழ
கோவணமே இல்லாதோரை நோக்கி
அய்யய்யோ அய்யய்யோ
தொடங்கியாச்சு இந்த
பாழாய்போன சூதாட்டம்
- கவிமதி, துபாய்