வளர்பிறை காலம்
வருமென்ற நம்பிக்கையில்
தேய்கிறது
மதி
தினந்தோறும்
2)
இருள் வெளியில்
எரிந்த பந்தை
எடுத்துத் திரும்ப
காத்திருக்கின்றன
நாய்கள்
காற்றைப் பிதுக்கி
கடாசியவைகள் பல
மிதிபடுகிறது
கைபடுகிறது
காணாமல் போவதில்லை நாளும்.
வெற்றிடங்கள் எல்லாம்
விழுந்து நிறைகின்றன
பந்துகள்
மறுபந்தை உதைக்கையில்
திரும்பி வந்து மோதுகிறது
முதல் பந்து
வீசியெறிந்தும்
உதைத்துத் தள்ளியும்
சோர்ந்து விழுகிறேன்
பந்துகளின் மேல்
இறுதியாய்
அமுக்குகிறேன் நீருக்குள்
நினைவுப் பந்துகளை.
- மதியழகன் சுப்பையா, மும்பை
கீற்றில் தேட...
நினைவுப் பந்துகள்
- விவரங்கள்
- மதியழகன் சுப்பையா
- பிரிவு: கவிதைகள்