தினம் தினம்
தூசுகளோ
கறைகளோ
இருக்கிறதோ இல்லையோ
தூய்மைப்படுத்துவது வேலையாகிவிட்டது
அவனுக்கு.
மேகம் உரச நீண்டு வளர்ந்த
கண்ணாடிச்சுவர்களில்
வானம் பூசியபடி
உயர உயரத்திற்கு மேலெழுகிறான்
இயந்திர உயர்த்தியில்.
கடமை முடித்த
கட்டிடத்தின் உச்சியிலிருந்து
துணையிழந்த தருணங்களில்
கீழ்நோக்கி
வீசுகிறான் பார்வையை
அதிர்ச்சியூட்டும் தொலைவில்
தொடக்கப்புள்ளி
அவன்
வாழ்வும் கூட.!
- இ.இசாக், துபாய் (
கீற்றில் தேட...
தொலைவு
- விவரங்கள்
- இசாக்
- பிரிவு: கவிதைகள்