கீற்றில் தேட...


ஆரோக்கிய குழந்தை
பிறக்க வேண்டி
Old ladyஅவன் ஆப்பிள் வாங்கிய
அதே கடையில்தான்
வறுமைக்குப் பயந்து
அவள் கர்ப்பம் கலைக்க
நான் பப்பாளி வாங்கினேன்.


************

‘என்னைக் கட்டிக்கிறியா?
என்றால்
காணாமல் போய்விடுகிறார்கள்
கல்யாணத்துக்காக
கையேந்தும்
கன்னிப் பெண்கள்.

*************

நாலுவேளை தின்று
நாற்பது முறை முயங்கி
நல்ல ஆரோக்கியத்துடன்
நடை பயின்றாலும்
‘ஏங் கண்ணு
எளச்சிப் போய்ட்ட’
என்பதாகத்தான்
குரலெழுப்புகிறார்கள்
ஆத்தாக்கள்
தனிக்குடித்தனம் போன
மகன்களைச்
சந்திக்கையில்.

மாறன்