
புறப்பட்டுவிட்ட
வார்த்தைகள்
பறந்து பறந்து
பிரபஞ்சத்தின் புறவாசலில்
அமர்கிறது
கோணல்மாணலென
கிளம்பிய
அண்டவெளி காற்று
உள்ளிழுத்த மூச்சால்
உயிர்சுரக்கிறது
என்பது போல்
எனக்குத்தெரியாமல்
என் குறித்தான
புறப்பேச்சுகள்
நிறைய குப்பைகளாய்
குவிந்துக்கிடக்கின்றன
இன்றுமென்
தலைகாணுகையில் மட்டும்
குசாலம் விசாரிப்புகள்
வெட்கங்கெட்டு தொடர்கின்றன
- கவிமதி, துபாய்