கீற்றில் தேட...


Manதெளிவாகவே தெரிகிறது
நிகழ்வுகளின்
இன்னொரு பக்கம்

கண்களைக் கவரும்
வண்ண வண்ண
கடவுள் படங்களின் மீது,
அச்சு இயந்திரங்களின்
ஓசையும்
'முருகனுக்கு மெஜந்தா போதாது'
என்றொரு குரலும்
கேட்கிறது எனக்கு.

திரையரங்கில் கிடந்து
வெளியேறும் போது
சொல்கிறார்கள்
'அப்பாசாமி நடிப்பு அற்புதம்'
உள்ளுக்குள்
உறுமுகிறேன் நான்

'அடப்பாவிகளே'
எடுத்ததில் தேறியதை
காட்டுகிறார்கள் நமக்கு.
எடுத்து எடுத்து
வெட்டி வீசப்பட்டதைக் குறித்து
ஏதாவது தெறியுமா உனக்கு?
இங்கிலாந்து ராணி
இந்தியா வந்தபோது
எல்லோரும் பார்த்தார்கள்
அவரை.
நான் பார்த்தது
அவருக்காகவே
அங்கிருந்தே
கொண்டு வரப்பட்ட
காரை.

என்னவோ போங்கள்.
வேர்களின் மீது
சிறுநீர் கழித்துக் கொண்டே
பூக்களைப் புகழ்வதற்குப்
பிடிக்கவில்லை எனக்கு.

உங்களுக்கு?


ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)