
சாந்தமான முகத்துடன்
காலை ஒன்பது மணியிலிருந்து
நிற்பாள்
எதிரே மேஜையிலிருந்து
காலை பதார்த்தங்களைப்
பனிரெண்டு மணி வரையிலும்
படைப்பாள் சலிக்காது
வருவோர்க்கெல்லாம்
மூன்று மணிவரையிலும்
தொடர்ந்திடும்
மதிய உணவு
சதா அய்ந்து பேருக்குக்
குறையாது
நின்ற வண்ணமே
வயிராற உண்டு செல்வர்
என்றேனும் அவளுக்கு
எவரேனும் உண்ண
உணவு பரிமாறியிருப்பாரா
அவளேனும் எதிர்பார்த்திருப்பாளா
களைப்பே தெரியாதா
வருடம் முழுதும்
சலிப்பே தோன்றாதா
அறியவே இயலாது எதையும்
அவளின்
புன்னைகை தவழும் முகத்திலிருந்து.....
- மதுமிதா (