கீற்றில் தேட...


சிரிப்பு

Skyமற்ற உயிர்கள்
மண்ணில் அறியா மருந்து!
நோயின் எதிரி
நுட்பங்களின் வெளிப்பாடு!

தனிமை

துறவியின் துணைவி !
கருப்பையின் உயிர்!
காதல் உள்ளங்களின் கோயில்1

கடிதம்

அன்பை வளர்க்கும் !
அற்புதத் தூதுவன்!
எண்ணங்களையும்
ஏக்கங்களையும்
ஏந்திச் செல்லும் பல்லக்கு!

தாலாட்டு

செப்பும் வாய் முடங்கிக் கிடந்து
சிசுவாக இருந்த போது நான்
செவி வழியே அருந்திய அமுது!
நடைவண்டி தள்ளி
உடையின்றித் தத்தி நடந்த
நாட்களில்
நான் கேட்ட முதல் தமிழ்!
முதல் தாய் மொழி!

சினம்

இளங்கோவடிகளின் சிலம்பு!
கண்ணகியின் கண்கள்!
மதுரைநகரின் அழிவு!
சிவனின் நெற்றிக்கண்!
விசுவாமித்திரரின் விரையம்!
பூமியின் பூகம்பம்!
நடுக்கடலில் கலத்தை அலைக்கழிக்கும் புயற்காற்று!
அமைதியை அழிக்கும் கொடுவாள்!

இரவு

இயற்கை ஓவியனின்
கருப்புப் பூச்சு!
ஒளிகளை விழுங்கிய பூதம்!
புதிய தம்பதிகளின் இனியகீதம்!
நிலவின் எதிரி! 

டாக்டர் மா.வீ. தியாகராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)