
எதுவுமில்லையென
வீணாய் விவாதிக்கிறது
உலகம்
பாறையில் ஒழிந்திருக்கும்
சிற்பங்களென
வண்ணங்கள் குழைந்த
ஓவியங்களென
பரிணமித்த
எழுத்துருக்களென
எல்லைகளற்ற பிம்பங்கள்
படிந்துக்கிடக்குமதில்
அவசியமற்றவைகளை
விலக்க விலக்க
முடிவற்று விரிகிறதொரு
வானம்
- ஷாஜஹான் பீர்முகம்மது (