கீற்றில் தேட...

திசை மாறிய சொல் அடுக்குகளில்

சிக்கித்தவிக்கிறது

நாம் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும்

ஒப்புதல் குறித்தான

அந்த ஒற்றைச்சொல்

 

எவ்வளவுதான் போராடியும்

நமக்குகந்தபடி மேற்கோள் காட்ட

சத்தியப்படவேயில்லை இது நாள் வரை

எந்த வித நிகழ்வுகளும்

 

முன்னுரை தவிர்த்து

அவதியாக நடுப்பக்கங்களில்

நுனிப்புல் மேயும்

ஒரு சராசா¢ வாசகனின்

மனப்பக்குவதில் நம் இருவரும் இல்லை

 

தடித்த புதகத்தின்

பொருள் அட்டவணையிலிருந்து

கதையை தேடிப்பயணிக்கும்

மனப்பக்குவத்தில் தான்  இருக்கிறோம்

நாம் இருவரும்

 

முழுவதையும் படித்து முடிக்க

சற்றே காலதாமதம் ஆகலாமெனினும்

நம் காத்திருப்பின் ஒவ்வொரு கணங்களிலும்

கனிந்த்கொண்டேதானிருக்கும்

காதல் குறித்தான மென் வருடல்கள்.

 

-பிரேம பிரபா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)