அருகில் வராதீர்கள்  
எரியத் தொடங்கியிருக்கிறேன்

இளைப்பாற
எடுத்துக் கொண்ட
இடங்களை

உறங்கும் 
பொழுதுகளை

தயக்கங்களின்  
பயங்களின்
வேர்களை

நான்  என்பதை

மறுக்கும்  
உலகங்களை

சளைக்கச்  செய்யும்  
சூழ்ச்சிகளை

முடியாதவைகளாய் 
குறிப்பெழுதியவைகளை.

சாம்பலாகும்  முன்
எரித்து  விடுவேன்...  
அனைத்தையும்...

அருகில் வராதீர்கள்    
எரிந்து  கொண்டிருக்கிறேன்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.