Womanஅற்புதச் சிற்பவிழி
பூஞ் சிற்றிடைப் பேரெழிலி

கற்பனைச் சிற்பியின்
முற்றிய நற்றமிழ்
ஏற்றிய தீபவொளி
எனைச் சுற்றிவா சிற்றருவி

சந்தனத்தில் நீராடி
நந்தவனப் பூச்சூடி
வந்துநிற்கும் என்தேவி
என் உயிரின் உயிரும் நீதான்டி

காலைப்பனி ஈரத்திலே
சேலைவனப் பூந்தளிரே
வாழையாய் நீயசைய
உயிரைக் கிள்ளுதடி
உன்னை
மாலையாய் அள்ளியணிய
கைகள் துள்ளுதடி

ஊருறங்கும் நேரத்திலே
யாருமற்றத் தீவினிலே
போர் தொடுக்கும்
உந்தன் நினைவில்
தீயாகிப்போனேன்
என்னைக்
கார் கூந்தல் மழை பொழிந்து
காப்பாற்று கிளியே

புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.