
கருப்புத் தொலை பேசியும் வண்ணமானது
குரல் கேட்டதில்
சந்தோஷத் தசைகள் விரிய
ஒரு பெரிய புன்னகையுடன்
வரவேற்பு இனித்தது.
எத்தனை ஆண்டுகள்.....
எங்கே தொலைத்தோம்
நினைத்திருப்போமா ..... நிகழ்ந்ததின்று
என்றோ அறுந்ததை தேடி தொடர்ந்ததில்
'மாறாத அலைவரிசை!' மகிழ்ந்ததுள்ளம்
புரிகிறது ...தோழி
நதிநீர் வரும் / வற்றும்
உயிரோடு இருக்கிறது ஊற்று.
(அமுதாவிற்கு)
- அன்பாதவன், மும்பை