திரும்ப திரும்ப
அடித்துக் கொள்கிறான்
வலி சகித்து
படையலுக்குமுன்
திருடித் தின்றதற்காய்
அப்பாவின் சாட்டை பேசியது
நினைவில்
கன்றி நிற்கும் தேகம்
இரத்தக் கசிவோடு
புரையோடிப்போன
புண்களில்
அடிகளின் சரித்திரம்
விரட்டும் பாதங்கள்
தெய்வத் திருவடியென
தொழுகிறான்
மீண்டும் மீண்டும்
இத்தனைக்கும் பிறகும்
கை விரிப்பவர் மீதான
கோபத்தை
தன் மீதே காட்டுகிறான்
மற்றுமொருமுறை
சவுக்கை வீசி
- மாறன்
கீற்றில் தேட...
அடி
- விவரங்கள்
- மாறன்
- பிரிவு: கவிதைகள்