
சீறிப் பாய்ந்த
அலாகலம் தோய்ந்த அம்பு
நீ அழகிய
அலாகலம் தோய்ந்த அம்பு!
பிரிய தோழியா..
நேரிய நாசி
நெஞ்சினைக் கீற
நீளக் கண்கள்
நரம்புகள் கொய்யும்!
உதிரத் தாக
நயவஞ்சகமே
பிரியத்துக்குரிய
எதிரியடீ!
நீ பிரியத்துக்குரிய
எதிரியடீ!
நீ தென்றலா!
மெளனப்புயல்கள்
சொற் சூறாவளிகள்
சுழல்ஜவலைகள்
எத்தனை ஆயுதங் கொண்டாய்
சுடும் தீயடீ
கண்ணே நீ
என்னுயிர் வளர்த்தீயடீ!
- கற்பகம் இளங்கோவன் (