
தெளிவாகச் சொன்னாள்
அவள்.
இரண்டரை ரூபாய் வீதம்
இரண்டு முழம் கொடு
தெள்ளத் தெளிவாகச்
சொன்னேன் நான்.
மூன்று நிமிடங்களுக்கும்
மேலாக
நீண்டு கொண்டு போனது
முழம் மூன்று ரூபாய்க்கான
அவளது நியாயங்களும்
இரண்டரை ரூபாய்க்கான
எனது விளக்கங்களும்.
இறுதியாக,
ஐந்தரை ரூபாய்க்கு
இரண்டு முழம் பூவை
சுருட்டிக் கொடுத்து விட்டு
இரண்டு அடிக்கு அப்பால்
இயல்பாகத்தான் துபினாள்
வெற்றிலைப் பாக்கு எச்சிலை.
ஆயினும்
சந்தேகமாகத்தானிருக்கிறது.
ஷோரூம்காரன்
சொன்ன விலைக்கு நான்
செருப்பு வாங்கி அணிவதை
பார்த்திருப்பாளோ
அந்தப் பூக்காரி
- ஜெயபாஸ்கரன் (