
வெளிச்சப் பொட்டு
களைத்து நிமிர்ந்த
கறுத்தப் பனை
அருகில்
சரிந்த தென்னை
வேலி இழந்த
வரிசைப் பூவரசு
மடக்கிப் போட்ட
கதவு
மக்கிப்போன
காவோலை
குமிந்துபோன
குப்பை வீடு
தலை
துவட்டிப் போகும்
புழுதிக் காத்து
கண்
கெளவிக்கொள்ளும்
ஒற்றையடிப்பாதை
கையசைக்கும்
மரங்கள்
காலிடைக்
குறுகுறுக்கும்
மண்துகள்கள்
பார்த்துக்
கொள்கின்றேன்
மீண்டும்
வந்ததனால் அல்ல
மீளமுடியாக்
கணங்களை
நினைத்துக்கொள்ள
- இளந்திரையன் (