உண்டெனினும்

சிலரைக் கடந்து
போய்விடுவதுண்டு நான்.
இவ்வாறாக
என்னைக் கடந்தும்
போகக்கூடும் சிலர்.
பார்த்தும்
பார்க்காததுபோல்
நடித்துவிட்டுப் போவதில்
எந்த சிரமமும் இருப்பதில்லை
எனக்கும்
எனது சில நண்பர்களுக்கும்.
பேசிக்கொள்ள
விரும்பாதவர்கள்.
மெளனமாக
போய்விடுவதுதான்
மனதுக்கு நிம்மதி
மொழிக்கும் பாதுகாப்பு.
எனினும்
தவிர்க்க முடியாத
சில சூல்களில்,
பேச ஒப்பாதவர்களோடு
பேச வேண்டியிருப்பதை
காட்டிலும்
சுலபமாகத் தானிருக்கும்
அந்தப் பாவிகளுக்கு
நண்பனாகவே
வாழ்ந்துவிட்டுப் போவது.
- ஜெயபாஸ்கரன் (