வரும்
7-ம் தேதி மட்டும்
தொந்தி
Vinayagarவளர்த்தவரெல்லாம்
எச்சரிக்கையாயிருங்கள்
இல்லையெனில்
கிரேன் வைத்து
உங்களை
கடலில் கரைத்து
விடுவார்கள்.

ஆம்!
அன்றுதான்
பிள்ளையார்
பிறந்தநாள்.
ஏன் பிறந்தார்?
எங்கு பிறந்தார்?
தெரியாது.
பிறந்தார்
அவ்வளவுதான்!

பேசாமல் நீங்கள்
பிளாஸ்டிக் ஆஃப் பாரிஸை
கூவத்திலேயே
கரைத்து விடலாமே!
கூவம்கூட
கடலில்தான்
கலக்கிறது

அய்யா
பக்த சிகாமணிகளே...
உங்கள்
பிள்ளையாரைக் கரைத்து
கடலையே கறையாக்க
கூட்டமாகப் போங்கள்
கூளமாகப் போங்கள்
அதைப் பற்றியெல்லாம்
எங்களுக்கு
கவலையில்லை.
மசூதிகளின் பக்கம்
மட்டுமே
போவோமென்று
அடம் பிடிக்காதீர்.

உங்களின்
மதக் கொப்புளங்கள்
நாறுகின்றன.
அதன்
விஷ வீச்சத்தின்
பாதிப்பு,
போபாலையே
‘போப்பா’ என்கிறது.

இன்று
வேண்டுமென்றால்
பகுத்தறிவுப் பாதையில்
மலிவு விலையில்
‘மஞ்சள் துண்டுகள்’
விற்கப்படலாம்.

ஈரோட்டுக் கிழவனின்
கறுப்பு ரத்தத்துளிகள்
ஒன்றிணைந்து
ஒருநாள்
பெருங்கடலாகும்.
அக்கடலில்
உங்களின்
பெரும் ‘காயத்தை’
கரைக்க முடியாது.
ஏனெனில்
அது வெங்காயக்கடல்!


பூங்காற்று தனசேகர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.