உன்னிடம் பேச வந்ததையெல்லாம்
நான் மறந்து விட
என்னிடம் பேச வந்ததையெல்லாம்
நீ மறந்து விட
அப்படி மறந்து போனதைச்
சொல்லவும்
நாம் சந்தித்த நொடியில்
மறந்து போக
இத்தனை நாட்களாக
இத்தனை மணி நேரங்களாக
அப்படி என்னதான் பேசினோம்
நினைவிருக்கிறதா உனக்கு
மறந்து
விட்டது
எனக்கு.

பூங்காற்று தனசேகர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.