அம்மாவின் மருத்துவச் செலவு
அப்பாவின் கடன்
தங்கைகளின் திருமணம்
தம்பியரின் படிப்பு
பக்கத்தில் எழும்பியிருக்கும்
புதிய வீடு
இதயம் கவர்ந்தவளுடன்
இணைந்து நடக்க
போடப்படவேண்டிய
பொருளாதாரப்பாலம்.....

புலம் பெயர்வின் காரணங்கள்
பொதுவென்றே நினைத்திருந்தேன்
எனக்கும் அவளுக்கும்.

நட்சத்திர உணவகங்களும்
நல்கிட இயலாத
அம்மாவின் கைப்பக்குவம்

தந்தை முகம் பாராது வளரும்
தலைமுறை அவலத்தை
துடைக்க நினைக்கும் துடிப்பு....

எப்போதும் புதிதாக
இளம் மனைவி......

மாலை நேரக் கடற்கரை
மழலையர் பேசும் யாழிசை.....

புரிந்துணர்வுத் தோழமை
புத்தகச் சந்தை....

இப்படியாக நீளும்
ஏக்கங்களும் பொதுவோ?

எனினும்......

பேரினவாதத்தின் அரக்கப்பசிக்கு
பறி கொடுப்பதற்கு
இனியேதுமில்லாது.......

கனவுகளைத் திரையிட
கண்களில் மட்டுமே உயிர் வளர்க்கும்
என் சக அறைத்தோழனுக்கு
எப்படித் தருவேன் ஆறுதலை?!


இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.