உன் ஆடை நிறமும்
என் ஆடை நிறமும்
ஒன்றாக இருந்ததென
மகிழ்வோடு சுட்டிக்காட்டி
''சாக்லேட்" பரிசுகேட்ட
சந்தோஷான நிமிடங்கள்...

பொங்கல் விடுமுறைக்கு
வீட்டுக்கு செல்லும்முன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்னிடம் வாழ்த்துபெற
நீவரும் நேரம்பார்த்து
நின்றிருந்த நிமிடங்கள்...

எங்கள் ஊர்நிகழ்ச்சிக்கு
எதிர்பாராமல் வந்தபோது
என்வீட்டு செல்லமாக
வலம்வந்த குழந்தையிடம்
அன்போடு பேசிய
அழகான நிமிடங்கள்...

நிலநடுக்கத்தால் எழுந்த
அலைகடல் சீற்றத்தில்
ஊரே பாதித்தபோது
உள்மனம் உனைக்கேட்க
தொலைபேசி வழியாக
நலம்கேட்ட தருணங்கள்...

வாழ்வோடு கலந்துவிட்ட
நிமிடங்கள் பலஇருந்தும்
வார்த்தைகள் பலிக்காமல்
நான் இங்கே..நீ அங்கே..

க.அருணபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.