Nightசர்ப்பத்தை அணைக்கும் பொருட்டு
குளிர்ச்சியினை வெளிப்படுத்துகிறது இரவு
நீண்டதொரு இரவினை
எட்டிப்பிடித்தே சர்ப்பம் முன்னேறி
இரவு நேரங்களை
விழுங்கத் தொடங்குகிறது
சர்ப்பத்தின் விருப்பப்படியே
இரவு வளைந்து செல்கிறது
இரவின் தீண்டலில் திருப்தியற்ற சர்ப்பம்
பின் தங்க நேரிடுகிறது
களைப்புற்ற சர்ப்பம்
தன் சட்டையைக் கழற்றி
இரவினை புரட்டிப்போடும் உத்வேகத்துடன்
மீண்டும் முன்னேறுகிறது
பொழுது புலரத்தொடங்குகிறது
ஒரு மூலையில் சர்ப்பம் சுருண்டு கிடக்க


பாண்டித்துரை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.