More articles by த.ஜெகன்

அலை நீ...
நான்
வரவேற்கும் கரையா?
வழியனுப்பும் கடலா?

தமிழ் நீ...
நான்
இலக்கியக் குறிப்பா?
இலக்கணப் பிழையா?

நெருப்பு நீ...
நான்
ஒளிரும் விளக்கா?
உருகும் மெழுகா?

கவிதை நீ...
நான்
ஆச்சர்யக் குறியா?
அச்சுப் பிழையா?

காற்று நீ...
நான்
பாடும் புல்லாங்குழலா?
பறக்கும் பூவின்மடலா?

மனசு நீ...
நான்
வெட்கமா?
வேதனையா?

தவம் நீ...
நான்
வரமா?
சாபமா?

கண்கள் நீ...
நான்
கனவா?
கண்ணீரா?

காதல் தேசம் நீ...
நான்
அரசனா?
அகதியா?

த.ஜெகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.