இயற்கையை இயக்க முடியாது
ஏன் மனிதன் கடவுள்லல்ல

கண்டதை சொல்ல முடியாது
ஏன் மனிதன் கடவுள்லல்ல

மூப்பை தடுக்க முடியாது
ஏன் காலச்சுழல் கையால்சுற்றுவதல்ல

சாவைத் தடுக்க முடியாது
ஏன் தளிரும்பூமியை தாங்குவது மனிதனல்ல

முயற்சி முன்னேற்றம் பயணங்கள்
ஏன் முற்றும்யெவரும் தெரிந்தவரில்ல

வாழும் வரைதான் வாழ்க்கை
வாழ்ந்த பின்அது இயற்கை

புரியாதபுலன்களுக்கு போரும் அழிவும் எதற்கு
புரிந்து வாழும்தகுதி மனிதனுக்கு இல்லையா

சூரியகுலத்தின் விண்ணும் வெளியும்
மண்ணுக்கும் மனிதனே வில்லனா?

சுதர்மன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.