அன்று..

நீ
என்
வசந்தம்...

என்
வாசல்
வருவாயா..
என
வரம் வேண்டி
தவமிருந்தேன்...

வந்தாய்..

வருடம்
மூன்று
முடிந்து...

வசந்தமாய்த்தான்..

வருடம்
ஒன்று
முழூதாய்
முடியும் முன்...

விடை
பெற்றுக்கொண்டாய்...

புயலாய்...

வசனம்
இல்லா
படம்
பார்த்த
உணர்வு
எனக்கு...

வருடம்
மாறும் முன்...

என்
வசந்தம்
மாறியது
ஏன்..???

விளங்காத
வினா
இது...

நானே
விளங்கி..
எனக்கே
விளக்கிக்கொண்ட
விடை
இது...

நளினம்
தேவை
நங்கையின்
நட்பைக்கொள்ள...

நடிப்பும்
தேவை
நங்கையின்
காதலைக்கொள்ள...

முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.