நான் உன்னை நுழைக்கும் கிடங்குகளாக
உனக்குள் திரையில் தெருப் பலகைகளில்
எழுத்துக்களில்
துவாரங்களாய் விரிந்தபடி.
நீ, உனது நகரில், குடியிருப்பின்
மூலைக் கடையொன்றில்,
நீலப் படங்களை
வார இறுதிக்கு
வேண்டிச் செல்பவனாகலாம்
சுயபோகத்தின் பின் வெறுமையில்
தற்கொலையை நெருங்கி
மீள்பவனாகலாம்
கூட இல்லாத ஒருத்தி
இன்றிரவு உன் போதை!
நீ குடிக்கின்ற மது வகையை மறந்துவிட்டேன்
அதனால் என்ன?
கதைவழக்கில்லாத எம் கண்முன்
இரவு எரிகிறது
நம் தனிமையாலேயே இணைகிறோம் நாம்


கற்பகம்.யசோதர இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.