எதையோ பார்த்தவாறு
படுத்திருக்கிறாய்...
பள்ளிகுடம் விட்டு
ஓடும் குழந்தைப்போல்
கண்களை விட்டு
ஓடுகிறுது கண்ணீர்.
சில வருடமாய்
நீ ஒன்றுமே பேசுவதில்லை
பேசமுடிவதுமில்லை..
நான்
பேசமாலிருந்த பருவத்தில்
கொஞ்சியும்.. விளையாட்டு செய்தும்
சிரிக்க வைப்பாய்...
உன்னை கொஞ்சுவதற்கோ
சிரிக்க வைப்பதற்கோ
மனம் முன்வராமலிருக்கிறது.
ஓவ்வொரு தீபாவளிக்கும்
பழைய சட்டையை
துவைத்து அணிந்து கொள்வாய்..!
எனக்கு புன்னகையுடன்
புதுத்துணி வாங்கி தந்து.
இந்த தீபாவளிக்கு
பழைய சட்டையை
அணிந்து கொண்டு..!
என் மகனுக்கு மலர்ச்சியோடு
புதுத்துணி வாங்கி தந்தேன்.
திண்ணையின் மூலையில்
எதையோ பார்த்தவாறு கிடக்கிறாய்.
மலம் சிறுநீர் வீசும்
வேஷ்டியோடு....!
- தியாகுஆசாத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )