Childநெய் சாதம்
பால் சோறு
கிண்ணத்தில் பிசைந்து !
வாய் நிறைந்து
ஒழுக ஊட்டுவாள். .!

உதிரி மல்லியை
கிண்ணத்தில் உதிர்த்து
மாலை கட்டுவாள்.
பூஜையறையில்
எப்போதும் புல்லாங்குழல்
வாசிக்கும் கிருஷ்ணணுக்கு..

கண்ணாடி குடுகையில்
வாழும் மீன் குஞ்சுகளை...
கிண்ணத்தில் நீருற்றி
கொஞ்சம் விளையாடவிடுவாள்.

சிவந்த பிஞ்சு விரல்கள்
மேலும் சிவக்க..
பச்சை மருதானியை
கிண்ணத்தில் எடுத்து
மேலும் அப்புவாள்..!

கிண்ணத்தில்
இரவு பாலூற்றி
காலையில் தயிரெடுத்து
மாயாஜாலம் எப்படி என்பாள்.

மஞ்சளென..சந்தனம் வழிய
அவள் கல்யாணவிழாவில்
எல்லோர் முகம் முன்னாலும்
வந்து போனதாம் கிண்ணம்..!

அவள் ஞாபகமாய்
தன்னுடனே
கிண்ணத்தை வைத்திருக்கிறார்
அப்பா.....
சிகரட் குடித்துவிட்டு
சாம்பலை தட்டுவதற்கு..!

தியாகுஆசாத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by தியாகுஆசாத்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.