ladyகழுமரத்தில் பறவைகள் அமரலாம்
மாமனிதன் இளைப்பாறவும் கூடுமோ?
எங்கோ உதயமாகும்
சூரியனின் சுரீர் ஒளி ஒரு பறவையைச் சுட
அது மற்ற பறவைகளைக் கலைத்தெழுப்புவதைப் போன்ற
ஒரு காலைப் பொழுதை எனக்குக் கொடு
கனத்த உடலுடன் சரிந்த குரலுடன்
இருளின் நிசப்தம் ரயிலை நான் விரும்பவில்லை
தொடைகளுக்கிடையே ஒரு வேகம்
பீறிட்டெழுந்து அடங்குவதை
நின்று திரும்பிப்பார்ப்பதில்லை காலம்
வண்டினைச் சிமிழுக்குள் மூடிவைக்கும்
சிறுவித்தையெல்லாம் என்னிடம் செல்லாது
எங்கெங்கும் பூத்திருக்கும் சோகத்தின் ரீங்காரம்தான்
ஒரு தோட்டத்தையே மெளனமாக்குகிறது
வல்லூறுகள் அமைதியானவைதாம் என்றாலும்

குட்டி ரேவதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.