Human lifeபகலும் இரவுமாயும்
ஓட்டமும் உறக்கமுமாயும்
உணவே
பிரதானமெனக்கொண்டு
உருளுகிறது
வாழ்க்கை.

பலரும்
பலவிதமாக
வாழ்ந்து பார்க்கவே
யத்தனிக்கிறார்கள்.
இருந்தும் -
வாழ்க்கையென்னவோ
அதன் போக்கிலேயே
அடியெடுத்துவைத்து
அரற்றுகிறது.

சமூகமாக
வாழ்கிற விலங்காம்
மனிதன்.
சமூகத்துக்காக
வாழ்வதாகவும்
சிலர்
சிலாகிக்கிறார்கள்.

இருந்தும்
என்ன செய்ய?

விதம்விதமான
மனங்களைச்
சுமந்துகொண்டும்
மனங்கள் முழுவதிலும்
ரணங்களைச்
சுமந்துகொண்டும்
வாழத்தான் செய்கிறார்கள்
மனிதர்
அனேகர் இங்கே -

இதயமற்றவர்களிடம்
சதா
இரக்கத்தை
வேண்டினபடி...
எதிரிகள் எவர் என்று
தெளியவும்
தெரியாதபடி... 

சோழ. நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It