Lonelinessயாரும் தேடி வருவதில்லையென்றாலும்
யாரையேனும் எதிர்பார்க்கிறது மனசு ...

காதுகள் பிளக்கும் தனிமையின்
பேரிரைச்சல்களுக்கு நடுவில்
கதவு தட்டப்படும் சத்தம்
உள்ளறைகளுக்கு எட்டாதுபோகுமோவென்று
குருவிசத்தமெழுப்புகிற அழைப்புமணி வாங்கி
மாட்டியாயிற்று வாசற்நிலைப்படியில் ...

கிட்டிபுள்ளிலிருந்து கிரிக்கெட்டிற்கு மாறிவிட்டிருந்த
தெருவாச சிறுவர்கள் கூட விளையாட்டுக்காய்
அழுத்தவில்லை அழைப்புமணியை ...

உச்சகட்ட உறக்கத்தை தொலைத்துவிட்டு
உள்ளறைகளில் உலவிக் கொண்டிருக்கையில்
யாரோ அழைப்பதைப் போன்றதோர் உணர்வு .
யாருமில்லையென்றறிந்து ஏமாந்து கொள்கிறேன்.
இனி என்ன செய்வது ... ?

யாரும் தேடி வருவதில்லையென்றாலும்
யாரையேனும் எதிர்பார்க்கத் தான் செய்கிறது
மனசும் ... உடம்பும் ... 

தர்மசம்வர்த்தினி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

More articles by தர்மசம்வர்த்தினி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.